»   »  போலீஸ் யூனிபார்ம் போட்டுக்கிட்டு நயன்தாரா நடந்து வந்தா... சும்மா அதிரும்ல! #Nayanthara

போலீஸ் யூனிபார்ம் போட்டுக்கிட்டு நயன்தாரா நடந்து வந்தா... சும்மா அதிரும்ல! #Nayanthara

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் ரசிகர்கள் இனி ஜோரா விசிலடித்து கை தட்டலாம். காக்கி யூனிபார்ம் போட்டு போலீஸ் வேடத்தில் அசத்தப் போகிறாராம்.

சினிமாவில் நடிகரோ, நடிகையோ காக்கிச் சட்டை போட்டு போலீஸ் வேடத்தில் நடித்து அசத்த வேண்டும் என்பது பலருக்கும் ஆசை.

இந்த ஆசை எம்.ஜி.ஆர் காலம் தொடங்கி இப்போதைய சிவகார்த்திக்கேயன் காலம் வரை உள்ள நடிகர்கள் நிறைவேற்றிக் கொண்டனர்.

நடிகைகளுக்கும் வைஜெயந்தி ஐபிஎஸ் விஜயசாந்தி போல காக்கி யூனிபார்ம் போட்டு வில்லன்களை பறந்து பறந்து உதைக்க வேண்டும் என்று ஆசைதான் ஆனால் யூனிபார்ம் போட்டாலும் பலருக்கும் பறந்து சண்டை போட காட்சிகள் அமைவதில்லை.

காக்கிச் சட்டை காதலிகள்

காக்கிச் சட்டை காதலிகள்

ராதிகா, லட்சுமி, விஜயசாந்தி காலம் தொடங்கி இன்றைய சினேகா, நிக்கி கல்ராணி வரைக்கும் காக்கிச் சட்டை போட்டு அசத்தியுள்ளனர். கஜினியின் அனுஷ்கா சில காட்சிகள் போலீஸ் வேடத்தில் நடித்திருப்பார். இப்போது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் அந்த லிஸ்டில் இணைந்துள்ளார்.

இமைக்கா நொடிகள்

இமைக்கா நொடிகள்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா நடிக்கவிருக்கும் படம் இமைக்கா நொடிகள். ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகயிருக்கும் இப்படத்தில்தான் நயன்தாரா முதன் முதலில் போலீஸ் அதிகாரியாக நடிக்கப் போகிறாராம்.

பிஸியான நயன்தாரா

பிஸியான நயன்தாரா

விக்ரம் நடிக்கும் இருமுகன் படத்திலும், கார்த்தியின் காஷ்மோரா படத்திலும் நயன்தாரா பிஸியாக நடித்து வருகிறார். இருமுகன் படம் ரிலீசுக்காக காத்துக்கொண்டிருக்கிறது.

நயன்தாராவுக்காக கதை

நயன்தாராவுக்காக கதை

நயன் தாராவை ஞாபகத்தில் கொண்டு தான் இமைக்கா நொடிகள் படத்தின் கதையை எழுதியுள்ளாராம். இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கப்பட உள்ளது . இப்படத்தில் அதர்வாவும் நடிக்கிறாராம். ஆனால், அதர்வாவுக்கு ஜோடியாக புதுமுக ஹீரோயின் நடிக்கயிருக்கிறார் என்கிறது கோலிவுட் தகவல்.

English summary
Actor Nayanthara, currently awaiting the release of Iru Mugan, will be seen playing a police commissioner in upcoming Tamil thriller Imaikaa Nodigal, which is slated to go on the floors from October.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil