»   »  தயாரிப்பாளராகிறார் நயன்தாரா... 'எதுக்கும் தேவயானி, ரம்பாகிட்ட கன்சல்ட் பண்ணுங்க'!

தயாரிப்பாளராகிறார் நயன்தாரா... 'எதுக்கும் தேவயானி, ரம்பாகிட்ட கன்சல்ட் பண்ணுங்க'!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தென்னிந்தியாவின் முதல் நிலை நாயகியாகத் திகழும் நயன்தாரா, அடுத்து சொந்தப் படம் ஒன்றை தமிழில் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளார்.

சமீபத்தில் நயன்தாராவைச் சந்தித்த உதவி இயக்குநர் ஒருவர் சொன்ன கதை நயன்தாராவுக்குப் பிடித்துப் போனதால், அந்தக் கதையில் தானே நடித்து தயாரிக்க முடிவு செய்துவிட்டாராம்.

Nayanthara turns movie peoducer

கதைப்படி மாவட்ட ஆட்சியர் வேடமாம் அவருக்கு.

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் 4 படங்கள் நடித்து வரும் நயன்தாரா, இந்தப் படங்களை முடித்ததும் தன் சொந்தப் படத்தில் நடிக்கப் போகிறாராம்.

முருகதாஸிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஜெகன், இப்படத்தை இயக்க உள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருந்தவர்கள் பின்னர் பெரும் சிக்கலுக்குள்ளானது சொந்தப் படம் தயாரித்ததால்தான். தேவயானி, ரம்பாவிடம் கேட்டால் கதை கதையாகச் சொல்வார்கள்.

நயன்தாரா சூதானமா இருந்தா சரி!

English summary
According to sources, Nayanthara is likely produce a movie on her own banner in Tamil

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil