»   »  லைன் மாறுகிறார் நயன்... தயாரிப்பாளர் ஆகிறார்!

லைன் மாறுகிறார் நயன்... தயாரிப்பாளர் ஆகிறார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை நயன் தாரா தனது புதிய படத்தை தானே தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வருகிறார் நடிகை நயன்தாரா. விரைவில் தமிழில் இவர் நடித்த இது நம்ம ஆளு படம் ரிலீசாக உள்ளது.

இந்நிலையில், தனது புதிய படத்தை தானே தயாரிக்க அவர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

வெற்றிப்பட நாயகி...

வெற்றிப்பட நாயகி...

சமீபகாலமாக தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாகத் தேர்வு செய்து நடித்து வருகிறார் நயன். மாயா, நானும் ரவுடி தான், தனி ஒருவன் என அவரது சமீபத்திய படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றுள்ளன.

ஜெகன் இயக்கத்தில்...

ஜெகன் இயக்கத்தில்...

இந்நிலையில், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார் நயன். இப்படத்தை முருகதாஸிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஜெகன் இயக்குகிறார்.

கலெக்டராக...

கலெக்டராக...

இப்படத்தில் மாவட்ட ஆட்சியாளராக நயன் நடிக்க இருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தயாரிப்பாளர்...

தயாரிப்பாளர்...

தனது கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் உள்ள இந்தப் படத்தை தானே தயாரிப்பது என நயன்தாரா முடிவெடுத்துள்ளாராம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு...

அதிகாரப்பூர்வ அறிவிப்பு...

தமிழ் மற்றும் தெலுங்கில் கைவசம் உள்ள மற்ற படங்களை முடித்து விட்டு இந்தப் படத்திற்கான அறிவிப்பை நயன் வெளியிடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
Actress Nayanthara, who is currently busy with films in Tamil and Telugu, will don the producer's hat with upcoming yet-untitled Tamil project, which will feature her in the role of a collector.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil