Nayanthara: திருநங்கையிடம் தீபாவளி வாழ்த்து பெற்ற நயன் - விக்கி தம்பதி.. எவ்வளவு பவ்யமா நிக்குறாங்க!

சென்னை: தீபாவளி வரும் திங்கட்கிழமை தான் என்றாலும் கோலிவுட் வட்டாரத்திற்கு நேற்றில் இருந்தே கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டது. கோலிவுட்டில் இருந்து நேற்று மட்டும் மூன்று படங்கள் வெளியானது. இந்த மூன்று படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, வசூலை அள்ளி வருகிறது. இந்நிலையில் நடிகை நயன்தாரா மற்றும் அவரது கணவர் இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து திருநங்கையிடம் தீபாவளி வாழ்த்து பெற்றுள்ளார்கள். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

நடிகை நயன்தாரா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார். இவர் இப்போது யாஷ் உடன் டாக்ஸிக் படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் மலையாளத்தில் மோகன்லால், மம்முட்டி இணைந்து நடிக்கும் படத்திலும் கமிட் ஆகியுள்ளார். இது தவிர தனது கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்படும் சில படங்களிலும் நடித்து வருகிறார். மிகவும் மும்முரமாக நடித்து வரும் நயன், அவ்வப்போது தனது குடும்பத்துடன் நேரத்தை செல்விட்டும் வருகிறார். இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால், தனது கணவர் இயக்கத்தில் உருவாகியுள்ள படமான LIK படத்தின் இணை தயாரிப்பாளராகவும் உள்ளார்.

Nayanthara Vignesh Shivan Couples Receives Diwali Wishes From Transgender Video Goes Trending

தயாரிப்பாளர் நயன்: LIK படம் இந்த ஆண்டு தீபாவளிக்கே ரிலீஸ் செய்யப்போவதாக ஏற்கனவே அறிவிப்புகள் வெளியனாது. ஆனால் படத்தின் நாயகன் பிரதீப் ரங்கநாதனின் டியூட் படமும் அந்த தேதியில் ரிலீஸ் ஆகிறது என்று சொல்லப்பட்டதால், ஒரு கட்டத்தில் இரண்டு படக்குழுவினரும் பேசியதில், LIK படத்தை அதன் பின்னர் ரிலீஸ் செய்து கொள்ளலாம் என்று படக்குழு முடிவு செய்ததாக தகவல் வெளியானது.

தீபாவளி வாழ்த்து: இந்நிலையில் நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் தம்பதியர் திருநங்கை, சல்மா ஷேக்கிடம் ஆசீர்வாதம் வாங்குகிறார்கள். இது தொடர்பான வீடியோவை திருநங்கை சல்மா ஷேக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த பலரும் தீபாவளிக்கு கணவனும் மனைவியும் சேர்ந்து திருநங்கையிடம் ஆசீர்வாதம் வாங்குகிறாங்களே, பசங்களை எங்கே காணவில்லை என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த வீடியோவில் இருவரும் செம க்யூட்டாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் போட்டும் வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X