»   »  நயனதாராவின் முதல் டிவி பேட்டி

நயனதாராவின் முதல் டிவி பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil
Nayantara
நயனதாரா தனது வாழ்நாளிலேயே முதல் முறையாக அளித்துள்ள டிவி பேட்டி சன் டிவியின் பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சியில் இடம் பெறுகிறது.

டிவிகளுக்கு பேட்டி கொடுப்பதில்லை, டிவி நிகழ்ச்சிகளில் தோன்றுவதில்லை, விளம்பரங்களில் நடிப்பதில்ைல என்பதை பாலிசி முடிவாகவே வைத்திருந்தவர் அஜீத்.

ஆனால் சமீபத்தில் புத்தாண்டு சிறப்பு டிவி நிகழ்ச்சிகளில் அஜீத்தின் பிரத்யேகப் பேட்டிதான் முதலிடத்தைப் பிடித்திருந்தது. முதல் முறையாக தனது கொள்கையை லேசாக தளர்த்திக் கொண்டு டிவிகளுக்கு பிரத்யேகமாக பேட்டி கொடுத்திருந்தார் அஜீத்.

அஜீத்தைப் போலவே நயனதாராவும் டிவிகளைக் கண்டாலே காத தூரம் ஓடி விடுபவர். எத்தனையோ டிவி நிறுவனங்கள் அவரிடம் சிறப்புப் பேட்டிக்காக அணுகியுள்ளன. ஆனால் யாருக்கும் அவர் பிடிபடவில்லை. அதேபோல விளம்பரங்களிலும் நடிக்க மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்து வருகிறார் நயனதாரா.

இந்த நிலையில் முதல் முறையாக நயனாராவின் டிவி பேட்டி ஒன்று பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியில் இடம் பெறுகிறது. அந்தப் பெருமையை தட்டிச் சென்றிருப்பது சன் டிவி.

சன்டிவியில் பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சியின் ஒரு ஐட்டமாக, யாரடி நீ மோகினி படப்பிடிப்பில் தனுஷ், நயனதாரவைப் பிடித்து ஒரு பேட்டியை வாங்கியுள்ளனர்.

புதுச்சேரியில் நடந்த படப்பிடிப்பின்போதுதான் இந்த பேட்டியை தனுஷும், நயனதாராவும் கொடுத்துள்ளனர். இந்தப் பேட்டி பொங்கல் நாளன்று ஒளிபரப்பாகிறது.

இந்த வகையில் நயனதாராவின் முதல் டிவி பேட்டி என்ற பெருமையை இந்த நிகழ்ச்சி பெறுகிறது.

இதற்கிடையே, தெலுங்குத் திரையுலகில் நயனதாரா குறித்த ஒரு ராசி செய்தி படு வேகமாக பரவி வருகிறது. அதாவது அவர் ஒரு பாட்டுக்கு ஆடிய படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன. எனவே நயனதாராவை ஒரு பாட்டுக்கு ஆட வைத்தால் அந்தப் படம் ஹிட் என்ற பேச்சு பலமாக பரவி வருகிறதாம்.

இதனால் நயனதாராவை ஐட்டம் பாட்டுக்கு ஆட வைக்க தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் அவரை முற்றுகையிட்டு அணத்த ஆரம்பித்துள்ளனராம்.

அவரும் முக்கிய இயக்குநர்கள், ஹீரோக்கள் படமாக இருந்தால் ஓ.கே. சொல்லி விடுகிறாராம். ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளத்தில் முக்கால்வாசியை ஒரு பாட்டுக்கு ஆட கேட்கிறாராம் நயனதாரா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil