»   »  நஸ்ரியா ‘ஸ்வீட் ஹார்ட்’, நயந்தாரா ‘டார்லிங்’: இது ‘ராஜாராணி’அட்லி ஸ்டைல்

நஸ்ரியா ‘ஸ்வீட் ஹார்ட்’, நயந்தாரா ‘டார்லிங்’: இது ‘ராஜாராணி’அட்லி ஸ்டைல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குநர் அட்லி இயக்கத்தில் ஆர்யா, நயந்தாரா, ஜெய், நஸ்ரியா, சத்யராஜ் மற்றும் சந்தானம் எனப் பெரிய நட்சத்திரப்பட்டாளத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ராஜா ராணி'

படத்தில் அழகான, இளமையான அப்பாவாக வருகிறாராம் சத்யராஜ். சந்தானமும், சத்யனும் தங்கள் காமெடிப் பணிகளைச் செவ்வணே செய்திருக்கிறார்களாம்.

விரைவில் திரைக்கு வர இருக்கும் இப்படத்தைப் பற்றி தினமும் சுவாரஸ்யமான தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன. இதோ, அவற்றில் சில உங்களுக்காக....

அட்லியுடன் நட்பு...

அட்லியுடன் நட்பு...

நண்பன் படத்தில் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணி புரிந்த போது ஏற்பட்ட நட்பின் அடிப்படையில், அட்லியின் திறமையைப் பார்த்து இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தாராம் சத்யராஜ்.

நடிக்கலப்பா....

நடிக்கலப்பா....

படத்தில் அவருக்கு நயந்தாராவின் அப்பா வேடமாம். சமீபத்தில் பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டி ஒன்றில், ‘இப்படத்தில் தான் நடிக்கவில்லையென்றும், வாழ்ந்திருக்கிறேன்' எனவும் தெரிவித்துள்ளார் சத்யராஜ். மேலும், இப்படத்தை தனது பிள்ளைகள் பார்த்தால் ‘அப்பா நீங்கள் இப்படத்தில் நடிக்கவில்லை. உண்மையாகவே நீங்கள் இது போன்ற அப்பா தான்' என கூறுவார்கள் என கூறியிருந்தார் சத்யராஜ்.

படத்துவக்க விழா...

படத்துவக்க விழா...

இப்படத்திற்கான க்ளாப் போர்ட்டை ஏ.ஆர். முருகதாஸ் அடித்து துவக்கி வைக்க, கமல் ஒளிப்பதிவைத் துவக்கி வைத்தார்.

சார ‘தீ’.......

சார ‘தீ’.......

சந்தானம் ‘சாரதி' என்ற கதாபாத்திரத்தில் ஆர்யாவின் நண்பராக வருகிறாராம். கதையை வழி கொண்டு செல்லும் கதாபாத்திரமென்பதால், இந்த கதாபாத்திரத்ஹ்டிற்கு ‘சாரதி' எனப் பெயர் போலும்.

டார்லிங்...ஸ்வீட் ஹார்ட்...

டார்லிங்...ஸ்வீட் ஹார்ட்...

படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் நண்பர்களாகவே பழகினார்களாம். இதற்கு உதாரணமாக இயக்குநர் அட்லி ‘நயனை டார்லிங் என்றும், நஸ்ரியாவை ஸ்வீட் ஹார்ட் என்றும் அழைப்பதையுமே கூறலாம்.

பாராட்டு மழை...

பாராட்டு மழை...

அட்லியை சூப்பர்ஸ்டாரும், உலக நாயகனும் தனித் தனியே அழைத்து பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

English summary
With the Raja Rani eagerness rising day by day as we get closer to its release date, the team reveals some of the characters and a few light moments in the sets.
Please Wait while comments are loading...