»   »  நீபாவின் மடியில்!

நீபாவின் மடியில்!

Subscribe to Oneindia Tamil

பெருசு நாயகி நீபா முழு நீள கிளாமரில் கலக்கும் புதிய படம் நதியின் மடியில்.

புத்தம் புது ஹீரோக்கள் இருவர் இப்படத்தில் அறிமுகமாகிறார்கள். டான்ஸ் மாஸ்டர்களின் கிளாமர் வாரிசான நீபா, தமிழில் முதன் முதலில் நடித்த படம் பெருசு.

இப்படத்தில் கண்டாங்கிச் சேலையுடன் வந்து போன நீபா, நடிப்பில் புது வித்தியாசம் காட்டி கோலிவுட்டை ஈர்த்தார். ஆனால் அடுத்தடுத்து நடிக்கும் வாய்ப்பு வரவில்லை. மாறாக கிளாமர் வேடங்களில் நடிக்கவே அதிகம் பேர் வாய்ப்பு தந்தனர்.

யோசித்துப் பார்த்த நீபாவும், சட்டென்று முடிவு செய்து, சடாரென்று கிளாமர் குளத்தில் குதித்து விட்டார். கையில் இரண்டு படங்களை வைத்துள்ள நீபாவுக்கு இப்போது நதியின் மடியில் என்ற புதிய பட வாய்ப்பு தேடி வந்துள்ளது.

பிலிம்கிராப்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நாயகனாக நடிப்பவர் ராம். புதுமுகமான இவருக்கு ஜோடியாக வருகிறார் நீபா. இன்னொரு நாயகியும் படத்தில் உண்டு. அவரது பெயர் பரீட்சா.

இது ஒரு முக்கோணக் காதல் கதையாம். ராமைப் பிடிக்க நீபாவும், பரீட்சாவும் கடுமையாக மோதுகிறார்களாம். கடைசியில் வெல்வது யார் என்பதுதான் கதையாம். ரவி சூர்யா என்பவர் படத்தை இயக்குகிறார்.

முக்கோணக் காதல் கதை என்பதால் நீபாவுக்கும், பரீட்சாவுக்கும் நடிப்பை விட கிளாமருக்குத்தான் நல்ல வாய்ப்பாம். இருவருக்கும் ஏற்படும் கடும் கவர்ச்சிப் போட்டியில் பலன் அடையப் போவது என்னவோ ரசிகப் பெருமக்கள்தான்.

சபாஷ் சரியான கிளாமர் போட்டி!

Please Wait while comments are loading...