»   »  நீபாவின் 'அரங்கேற்றம்'!

நீபாவின் 'அரங்கேற்றம்'!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Click here for more images

சின்னத்திரையில் பல தொடர்களில் நடித்துக் கொண்டிருக்கும் நீபாவின் பரத நாட்டிய அரங்கேற்றம் சென்னையில் நடந்தது.

டான்ஸ் மாஸ்டர் தம்பதிகளான வாமன்-மாலினியின் மகள் தான் நீபா. முறைப்படி பரதம் கற்ற அவரின் கண்கள் பேசும்போதே அபிநயம் வெளிப்படுகிறது.

வாணி மஹாலில் ஒரு நடன விழாவை தொடங்கி வைக்க வந்த இயக்குனர் பாரதிராஜா விழாவை தொடக்கி வைத்த கையோடு கிளம்பினார். அங்கே நீபாவின் அரங்கேற்றம் நடக்கவிருப்பதை சொன்னவுடன் ஆர்வத்தோடு அமர்ந்து நீபாவின் நாட்டியத்தைப் பார்த்தார்.

நீபா அரங்கேற்றம் செய்து முடித்தவுடன் முதல் நபராக மேடையேறி பாராட்டித் தள்ளிவிட்டாராம் பாரதிராஜா. மேலும் டைரக்டர் எஸ்.பி. முத்துராமன், நடிகை தேவயானி, அவருடைய கணவர் ராஜகுமாரன் மற்றும் ராதிகா என அனைவரும் வந்து பாராட்ட நீபா மகிழ்ச்சியில் திக்குமுக்காடினார்.

இவருடைய நடனத்தை சின்னத்திரை நட்சத்திரங்கள் மற்றும் தற்போது சன் டிவியில் இவர் பங்கேற்கும் மஸ்தானா மஸ்தானா நடன குழுவினரும் வந்து நேரில் வந்து பார்த்துவிட்டு வாழ்த்தினர்.

நீபாவின் பெற்றோர் நடன ஆசிரியர்களாக இருந்தாலும், நடனத்தில் பிரபு தேவா தான் நீபாவுக்கு குருவாம். அவர் தான் நீபாவுக்கு பயிற்சி தந்து வருகிறாராம்.

Read more about: neeba

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil