»   »  மறுபடியும் நீபா

மறுபடியும் நீபா

Subscribe to Oneindia Tamil
Neeba

பெருசு படத்தோடு காணாமல் போய் விட்ட நடிகை நீபா, மீண்டும் பெரிய திரைக்கு வருகிறார்.

டான்ஸ் மாஸ்டர்களான லலிதா - மணியின் புதல்விதான் நீபா. பெருசு படத்தில் நாயகியாக நடித்து அறிமுகமான நீபா அதன் பின்னர் ஆளைக் காணவில்லை. இடையில் கவர்ச்சி நடனமாடியிருந்தார் ஒரு படத்தில்.

அதன் பின்னர் டிவி சீரியலுக்குத் தாவிய நீபா, டிவி சீரியல்களில் நடித்து வந்தார். சன் டிவியில் ஒளிபரப்பான மஸ்தானா மஸ்தானா டான்ஸ் ஷோவிலும் கலந்து கொண்டு நடனமாடினார். இந்த நிலையில் தற்போது நீபாவுக்கு மீண்டும் பெரிய திரை வாய்ப்பு தேடி வந்துள்ளது.

ஆண்டாள் அழகர் என்ற படத்தில் 2வது நாயகியாக நடிக்கவுள்ளார் நீபா. படத்தின் நாயகன் விஷ்வா. இவர் காசு இருக்கணும் என்ற படத்தில் நடித்து அறிமுகமானவர். ஆண்டாள் அழகர், அவருக்கு 2வது படம்.

இப்படத்தில் ஸ்ரீரஞ்சனி என்கிற இன்னொரு நாயகியும் இருக்கிறாராம். முதல் படத்தில் நடிப்பால் அசத்திய நீபா, இப்படத்தில் கிளாமரிலும் கலக்கப் போகிறாராம்.

இந்தப் படம் காதலும், குடும்பப் பாசமும் இணைந்த படமாக இருக்கும் என்று கூறுகிறார் இயக்குநர் மகாதுரை. பிப்ரவரியில் படம் திரைக்கு வருகிறதாம்.

ஆண்டாள் அழகராவது நீபாவுக்கு வழிகாட்டட்டும்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil