»   »  நீபாவின் அரங்கேற்றம்!

நீபாவின் அரங்கேற்றம்!

Subscribe to Oneindia Tamil


கவர்ச்சியில் கலக்கிக் கொண்டிருக்கும் நீபா, சமீபத்தில் தனது பரதநாட்டிய அரங்கேற்றத்தை சென்னையில் நடத்தி தனது பரதநாட்டியத் திறமையையும் வெளிக்காட்டி திரையுலகினரை பரவசப்படுத்தினார்.

Click here for more images

பெருசு படம் மூலம் நடிகையானவர் நீபா. இவரது தாயும், தந்தையும் சினிமாவில் பிரபல டான்ஸ் மாஸ்டர்களாக இருந்தவர்கள் என்பதால் நீபாவுக்கும், டான்ஸ் திறமை நீக்கமற நிறைந்திருக்கிறது.

பெருசு படத்தில் நடிப்பால் மிரட்டினார் நீபா. ஆனால் அடுத்து டக்கென கவர்ச்சிக்குத் தாவினார். குத்துப் பாட்டுக்களுக்கு டான்ஸ் ஆட ரெடி என்று நீபா விட்ட ஸ்டேட்மென்ட்டால், குஷியாகிப் போன பல தயாரிப்பாளர்களும், தங்களது படங்களில் நீபாவின் குத்துப் பாட்டைப் போட்டு சந்தோஷப்பட்டனர்.

ஆனால் நீபா எதிர்பார்த்தது போல குத்துப் பாட்டு வாய்ப்புகளும் குமிந்து விடவில்லை. இதனால் டிவி சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார் நீபா.

இந்த நிலையில் தான் ஆசை ஆசையாய் கற்று வைத்திருந்த பரதநாட்டியத் திறமையை வெளியுலகுக்குத் தெரியப்படுத்த விரும்பினார் நீபா. அம்மா, அப்பாவிடம் இதைச் சொல்ல ஆசை மகளின் அரங்கேற்றத்துக்கு ஏற்பாடு செய்தனர்.

சென்னையில் திரையுலக பிரபலங்களின் முன்னிலையில் நீபாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் சமீபத்தில் நடந்தது. பாரதிராஜா உள்ளிட்டோர் வந்திருந்து நீபாவின் நீட் டான்ஸைப் பார்த்து ரசித்துப் பாராட்டினர்.

தனக்கு குத்து மட்டும் தெரியும் என்று நினைத்திருந்த பலரையும் மூக்கில் விரல் வைக்கும்படியாக பரதத்திலும் கலக்கி விட்டார் நீபா.

நீபா, சூப்பர்பா!

Read more about: neeba
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil