»   »  காதைக் கிட்ட கொண்டு வாங்க, நீலிமாராணி என்ன செய்யப்போறாங்க தெரியுமா?

காதைக் கிட்ட கொண்டு வாங்க, நீலிமாராணி என்ன செய்யப்போறாங்க தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சினிமா, சீரியல் என்று ஒரு ரவுண்ட் வந்த நீலிமா ராணி எழுத்தாளர் அவதாரம் எடுத்தார். இப்போது நிகழ்ச்சி தயாரிப்பாளராக மாறியுள்ளார்.

தேவர் மகன், பாண்டவர் பூமி, விரும்புகிறேன் படங்களில் குழந்தை நட்சதிரமாக நடித்த நீலிமா ராணி. மெட்டி ஒலி மூலம் சின்னத்திரைக்கு வந்தார்.

கோலங்கள், தென்றல், செல்லமே ஆகிய தொடர்களில் நடித்த நீலிமா, இதய திருடன், மொழி, திமிரு, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல படங்களில் தோழியாக நடித்தார்.

குட்பை சொன்ன நீலிமா

குட்பை சொன்ன நீலிமா

பிஸியாக நடிக்கும் போதே திருமணம் செய்து கொண்டு சின்னத்திரை, பெரிய திரைக்கு குட்பை சொல்லிவிட்டு ஒதுங்கினார்.

ஹீரோயினாகப் போறேன்

ஹீரோயினாகப் போறேன்

காஜல் அகர்வால் கொடுத்த ஐடியாவினால் உடம்மை ஸ்லிம்மாக்கி ஹீரோயினாக நடிக்கப்போகிறேன் என்று வந்தார். வந்தவருக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைக்கவில்லை.

வாய்ப்பு இல்லையே

வாய்ப்பு இல்லையே

ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பண்ணையாரும் பத்மினியும் படங்களில் கேரக்டர் ரோல்கள்தான் கிடைத்தது. இப்போது அமளி துமளி, இருவர் உள்ளம், வாலிபராஜா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

பேக் டூ சின்னத்திரை

பேக் டூ சின்னத்திரை

இந்த நிலையில் மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பிய நீலிமா ராணி, மகாபாரதம், வாணி ராணி, தாமரை ஆகிய தொடர்களில் நடித்து வருகிறார்.

ராதிகாவின் அழைப்பு

ராதிகாவின் அழைப்பு

இதுபற்றி நீலிமாராணி கூறியிருப்பதாவது: ராதிகா மேடம் அழைத்ததால் சின்னத்திரைக்கு மீண்டும் வந்திருக்கிறேன். காரணம் நான் சின்னத்திரையில் பெரிய இடத்தை பிடித்ததற்கு அவர் கொடுத்த வாய்ப்புகள்தான் காரணம்.

சீரியல் ஹீரோயின்

சீரியல் ஹீரோயின்

நான் இதுவரை சீரியல்களில் வில்லியாகத்தான் நடித்திருக்கிறேன். முதன் முறையாக பாசிட்டிவான கேரக்டரில் நடிக்கிறேன். சினிமாவிலும் தொடர்ந்து நடிப்பேன் என்கிறார் நீலிமா.

நிகழ்ச்சி தயாரிப்பாளர்

நிகழ்ச்சி தயாரிப்பாளர்

இதோடு புதிய சேனல் ஒன்றில் டாக் ஷோ தயாரிக்க பேச்சு நடத்தி வருகிறாராம். இந்த நிகழ்ச்சியை இயக்கப் போவது நீலிமாவின் கணவராம்.

English summary
Popular television actress Neelima Rani has produced new talk in Private TV Channel
Please Wait while comments are loading...