»   »  நெல்லையில் பிறந்து.. கொச்சியில் வளர்ந்து.. மும்பையில் வசித்து.. கன்னடத்தில் நடித்து.. அடடா "காயு"

நெல்லையில் பிறந்து.. கொச்சியில் வளர்ந்து.. மும்பையில் வசித்து.. கன்னடத்தில் நடித்து.. அடடா "காயு"

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: இந்தியாவின் கலாச்சார பன்முகத்தன்மை உண்மையிலேயே அடடா ரகம்தான்.. அதற்கு காயத்ரி ஐயர் ஒரு குட்டியூண்டு உதாரணம். கன்னட நடிகையாக அடையாளம் காணப்பட்டுள்ள காயத்ரி ஐயர் உண்மையில் நெல்லைப் பக்கத்தில் பிறந்தவர் ஆவார்.

காயத்ரியிடம் பேசினாலே போதும் நமது கலாச்சார பன்முகத்தன்மையின் வீச்சை புரிந்து புளகாங்கிதம் அடையலாம். கன்னடத் திரையுலகினரின் பிரியத்துக்குரிய காயத்ரி ஐயர் தான் ஒரு பரிபூரண இந்தியப் பெண் என்பதை பெருமையுடன் சொல்கிறார்.

காயத்ரியின் பூர்வீகம் நெல்லை ஆகும். அவர் பிறந்தது வளர்ந்தது கொச்சியில். தற்போது மும்பையில் வசித்து வரும் அவர் கன்னடத்தில் நாயகியாக கலக்கி வருகிறார். தற்போது தான் நடித்துள்ள ஓயுஜா என்ற திகில் + திரில் படத்தை எதிர்பார்த்துக் காத்துள்ளார். தெலுங்கிலும் இது வெளியாகவுள்ளது.

பெயர் மாற்றம்

பெயர் மாற்றம்

தற்போது காயத்ரி தனது பெயரை ஊர்மிளா காயத்ரி என்று மாற்றியுள்ளார். காரணம்... ஜோதிடர்களின் அட்வைஸ். ஓயுஜா படம் குறித்து சொல்லுங்க காயு என்று கேட்டால் கடகடவென்று பேசுகிறார்.

நான்தான் டைரக்டர்

நான்தான் டைரக்டர்

இப்படத்தில் நான் ஒரு குறும்பட இயக்குநராக நடிக்கிறேன். வினோதமான சம்பவங்களுக்கு மத்தியில் சிக்கிக் கொள்ளும் நான் அதிலிருந்து எப்படி மீள்கிறேன் என்பதுதான் கதை.

பயந்த அனுபவம் நிறைய

பயந்த அனுபவம் நிறைய

திகில் படத்தில் நடிப்பது எனக்கு இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் நடித்துள்ளேன். எனவே எப்படி ரியாக்ஷன் காட்ட வேண்டும் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இப்படத்திற்காக நான் நிறைய கத்தினேன், ஓடினேன்.

நாலு மொழியும் அத்துப்படி பாஸு

நாலு மொழியும் அத்துப்படி பாஸு

எனக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளும் அத்துப்படி. நான்கு மொழிகளிலும் நன்றாகப் பேசுவேன். சில மொழிகளில் எழுதக் கூடச் செய்வேன்.

மாடல்

மாடல்

நான் நடிக்க வரும் முன்பு மாடலிங் செய்து வந்தேன். ஆனால் அதை நான் திட்டமிட்டு செய்யவில்லை. தற்செயலாக நடந்தது. அதேபோலத்தான் நடிப்பும். அதுவாக வந்த வாய்ப்புதான் நடிப்பு.

படிப்பு சூப்பரப்பு

படிப்பு சூப்பரப்பு

நான் நல்லா படிப்பேன் தெரியுமா. கிளாஸில் நான்தான் எப்போதுமே பர்ஸ்ட் ரேங்க். கல்லூரியிலும் கூட நான்தான் பர்ஸ்ட். அப்போதுதான் மாடலிங் வாய்ப்பு கிடைத்தது. அப்படியே பாதை மாறி வந்து விட்டேன்.

என்னா மரியாதை என்னா மரியாதை

என்னா மரியாதை என்னா மரியாதை

கன்னட சினிமாவில் தென்னிந்திய நடிகைகளுக்கு நல்ல மரியாதை தருகிறார்கள். நன்றாக மதிக்கிறார்கள். கெளரவமாக நடத்துகிறார்கள். திறமைகளை ஊக்குவிப்பார்கள். அதுவும் கன்னடம் பேசத் தெரிந்து விட்டால் போதும், கிடைக்கும் மரியாதையே தனிதான் என்றார் காயத்ரி...!

English summary
Nellai Gayatrhi Iyer rocks Kannada cinema
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil