'குட் நியூஸ்' சொல்ல கவர்ச்சி போட்டோ தேவையா?: சமந்தாவை விளாசிய நெட்டிசன்கள்
சென்னை: இன்ஸ்டாகிராமில் தன் கவர்ச்சிப் புகைப்படத்தை வெளியிட்ட சமந்தாவை நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.
இன்ஸ்டாகிராமில் சமந்தாவை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 6 மில்லியனை(60 லட்சம்) எட்டியுள்ளது. இதை பார்த்த சமந்தா குஷியாகி நன்றி தெரிவிக்க தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டார்.

முன்னதாக பிகினி புகைப்படம் வெளியிட்டபோதும் இதே போன்று விமர்சனம் எழுந்தது. என் உடம்பு, என் உடை, என் இஷ்டம் என்று அப்பொழுதே பதில் அளித்துவிட்டார் சமந்தா.
திருமணமாகிவிட்டால் கவர்ச்சி உடை அணியக் கூடாது என்று சட்டம் எதுவும் இல்லை. எனக்கு எது சவுகரியமாக இருக்கிறதோ அந்த உடையை தான் அணிவேன் என்று அவர் தெரிவித்துள்ளார். அதனால் தனது கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட அவர் தயங்குவது இல்லை.


Click it and Unblock the Notifications











