உள்ளங்காலில் ஸ்வஸ்திக் பச்சை: நடிகையை கழுவிக் கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்
Recommended Video

மும்பை: பாலிவுட் நடிகை சோபியா ஹயாத் தனது உள்ளங்காலில் ஸ்வதிக் பச்சை குத்தியுள்ளதை பார்த்து நெட்டிசன்கள் அவரை விளாசியுள்ளனர்.
பாலிவுட் நடிகையும், மாடலுமான சோபியா ஹயாத் சர்ச்சைக்கு பெயர் போனவர். ஏதாவது சர்ச்சையை கிளப்பி ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
கன்னியாஸ்திரியாக போவதாக அறிவித்துவிட்டு திருமணம் செய்தார். பின்னர் கணவரை பிரிந்துவிட்டார்.
பச்சை
சோபியா ஹயாத் தனது உள்ளங்காலில் ஸ்வதிக்கை பச்சை குத்தியுள்ளார். புனிதமாக கருதப்படும் ஸ்வஸ்திக்கை சோபியா ஹயாத் இப்படி காலில் பச்சை குத்தி அதை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். காலில் ஷூ இல்லாமல் நடந்ததை நெட்டிசன்களிடம் தெரிவிக்கவே அந்த புகைப்படம்.

மதம்
புனிதமாக கருதப்படும் ஸ்வஸ்திக்கை காலில் பச்சை குத்தி அசிங்கப்படுத்தி விட்டீர்கள் என்று கூறி நெட்டிசன்கள் அவரை கழுவிக் கழுவி ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஏதாவது ஒரு மதத்தை அவமதிக்கவில்லை என்றால் உங்களுக்கு தூக்கம் வராதா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

புகைப்படம்
பப்ளிசிட்டி தேட இந்த அளவுக்கு இறங்கி வருவதா?. நீங்கள் விளம்பரம் தேட ஸ்வஸ்திக் தான் கிடைத்ததா என்று கூறி நெட்டிசன்கள் சோபியா ஹயாத்தை மோசமாக திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

கால்
உடலில் அனைத்து பாகமும் புனிதம் என்று கூறும் நீங்கள் உங்கள் அம்மாவின் முகத்தை காலில் பச்சை குத்துங்கள் என்று சிலர் கோபமாக தெரிவித்துள்ளனர். யார் கோபமாக கத்தினாலும் அதை கேட்பதாக இல்லை சோபியா.


Click it and Unblock the Notifications











