தென்னை மரம் ஏறும் ரிமா கல்லிங்கல்.. விவகாரமாக கமெண்ட்ஸ் அடிக்கும் நெட்டிசன்ஸ்!

சென்னை: துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் மூலம் பரபரப்பாகப் பேசப்படும் நடிகையாக மாறி இருக்கிறார் நடிகை ரிமா கல்லிங்கல். மலையாள திரையுலகில் தன் தனித்துவமான பாத்திரங்கள் மற்றும் துணிச்சலான கருத்துக்களுக்காகப் பெரிதும் அறியப்படும் ரிமா கல்லிங்கல் நடித்துள்ள 'தி மித் ஆப் ரியாலிட்டி' என்ற படம் வருகிற 16-ந்தேதி திரைக்கு வருகிறது. இதுகுறித்து அவர் யூடியுப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் பிறந்து ரிமா, மும்பை செயின்ட் சேவியர் கல்லூரியில் சர்வதேச வணிக மேலாண்மையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். கலாமண்டலம் பினோய் மற்றும் கலாமண்டலம் ராஜஸ்ரீ ஆகியோரிடம் எட்டு ஆண்டுகள் பரதநாட்டியம் கற்றுக் கொண்டார். 2008-ஆம் ஆண்டு மிஸ் கேரளா போட்டியில் இவர இரண்டாம் இடத்தை பெற்றார்.

Rima Kallingal Malayalam actress Netizens
Photo Credit:

ரிமா கல்லிங்கல்: அதன் பின், 2009 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படமான 'ரீது' மூலம் ரிமா திரையுலகில் அறிமுகமானார். பின்னர், 'இந்தியன் பியூட்டி' என்ற இந்திய ஆங்கிலத் திரைப்படத்திலும் நடித்தார். 2012 ஆம் ஆண்டு '22 பீமேல் கோட்டயம்' திரைப்படத்தில் டெஸ்ஸா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த படத்தில் அவர் சிறப்பாக நடித்ததற்காக, கேரள மாநில அரசின் சிறந்த நடிகை விருதையும் பெற்றார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், 2013 ஆம் ஆண்டு, பிரபல இயக்குனர் ஆஷிக் அபுவை மணந்தார். இவர்கள், கேரளாவில் மிகவும் பிரபலமான, 'மமாங்', 'பாபாயா' போன்ற உணவு விடுதியை நடத்தி வருகின்றனர்.

விவகாரமான கமெண்ட்ஸ்: இந்நிலையில் நடிகை ரிமா கல்லிங்கல் நடித்துள்ள, 'தி மித் ஆப் ரியாலிட்டி' வருகிற 16ந் தேதி திரைக்கு வருகிறது. படத்தில் ரிமா தென்னை மரம் ஏறும் காட்சிகள் இடம் பெற்றுள்ள. இந்த படத்தின் போஸ்டர் வெளியானதும் இணையவாசிகள் பலரும் ரிமாவுக்கு கடுமையாக ட்ரோல் செய்தனர். இதற்கு பேட்டியில் பதிலளித்த ரிமா,,படத்தில் தனி தீவில் எல்லா வேலைகளும் நானே செய்து தனியாக வசிக்கிற ஒரு பெண்ணின் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறேன். படத்திற்காக தென்னை மரம் ஏற கற்றுக் கொண்டேன், அங்கு உள்ள ஒருவர் எனக்கு தென்னை மரம் ஏற கற்றுக் கொடுத்தார். பல நாட்கள் பயிற்சிக்குப் பிறகு நான் மரம் ஏற கற்றுக் கொண்டேன். தென்னை மரம் ஏறுவது ஜாலியாக இருந்தது. படத்தில் சவாலான காட்சிகளில் நடித்துள்ளேன். விமானத்திலிருந்து குதித்து இருக்கிறேன், பாம்பை கழுத்தில் போட்டு நடித்திருக்கிறேன் இது போன்ற சவாலான கேரக்டர்களில் நடித்தது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என ரிமா அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X