தாலியை கழட்டி வச்சிட்டு.. தமன்னா ரூட்டில் களமிறங்கிய கீர்த்தி சுரேஷ்.. இனிமேல் இப்படிதானா?

சென்னை: திருமணம் ஆன புதிதில் நடிகை கீர்த்தி சுரேஷ் தாலியுடன் பட விழாவில் பங்கேற்றது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. கீர்த்தி சுரேஷை பார்த்து இந்தி நடிகைகள் எல்லாம் கற்றுக் கொள்ள வேண்டும் என பலரும் அவரை உதாரணமாக்கி மற்ற நடிகைகளை ட்ரோல் செய்தனர். ஆனால், நேற்று இரவு நடந்த நகை கண்காட்சி நிகழ்ச்சியில், கழுத்தில் காஸ்ட்லியான வைர நகையை மட்டும் அணிந்துக் கொண்டு கீர்த்தி சுரேஷ் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்ததை பார்த்து அவரை பலரும் ட்ரோல் செய்யத் தொடங்கியுள்ளனர்.

நடிகைகள் திருமணமான பின்னரும் சினிமாவில் நடிக்க தங்கள் தாலியை கழட்டி வைப்பது சாதாரண விஷயமாக மாறி பல காலங்கள் ஆகிவிட்டன. ஆனால், மற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது அவ்வாறு செய்வதை சில நடிகைகள் கடைபிடித்து வருகின்றனர். நடிகை கீர்த்தி சுரேஷும் அந்த வரிசையில் இணைந்து விட்டார் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

Netizens trolled Keerthy Suresh after seeing her in glam avatar after marriage
Photo Credit:

தமன்னாவை போல கீர்த்தி சுரேஷும் தற்போது பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், கிளாமர் ரூட்டுக்கு சென்றுவிட்டாரா? என்கிற கேள்விகள் கிளம்பி உள்ளன.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: கீர்த்தி சுரேஷ் மற்றும் விஜய் தொடர்பாக ஏகப்பட்ட கிசுகிசுக்கள் வலம் வந்த நிலையில், திடீரென தனது காதலரை அறிமுகப்படுத்த் திருமணமும் செய்துக் கொண்டு அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார் கீர்த்தி சுரேஷ். கீர்த்தி சுரேஷ் தனது நெருங்கிய தோழி என்பதை விஜய்யும் உணர்த்தும் வகையில் அவரது திருமணத்துக்காக கோவாவுக்கு சென்றிருந்தார்.

படங்கள் ஓடவில்லை: கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான சைரன், ரகு தாத்தா மற்றும் பேபி ஜான் என மூன்று படங்கள் படுதோல்வியை சந்தித்தன. கீர்த்தி சுரேஷ் சிறு வயதில் இருந்தே மலையாள படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ரஜினி முருகன் திரைப்படம் கீர்த்தி சுரேஷுக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. தெலுங்கில் வெளியான மகாநடி (நடிகையர் திலகம்) திரைப்படம் ஆல் ஏரியாவிலும் ஹிட் அடித்து தேசிய விருதையும் பெற்றுத் தந்தது. ஆனால், அதன் பின்னர் அவர் நடித்த படங்கள் பெரிதாக போகவில்லை.

ரிலீஸ் ஆகாத ரிவால்வர் ரீட்டா: கடந்த மாதமே ரிவால்வர் ரீட்டா திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அந்த படத்தின் டிரைலர் வெளியானது கூட பலருக்கும் தெரியாத வகையில் யாருமே கண்டுக்கொள்ளாத நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் தள்ளிப்போயுள்ளது. இந்த ஆண்டு தெலுங்கில் வெளியான உப்பு கப்புரம்பு படமும் ஹிட் அடிக்கவில்லை. அடுத்ததாக மிஷ்கின் உடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

தமன்னா ரூட்டில் கீர்த்தி சுரேஷ்: இந்தியில் தொடர்ந்து நடிக்க திட்டமிட்டுள்ள கீர்த்தி சுரேஷ் அடிக்கடி மும்பைக்கு விசிட் அடித்து வருகிறார் என்கின்றனர். தமன்னா ரூட்டில் கீர்த்தி சுரேஷும் கவர்ச்சி ரூட்டை தேர்வு செய்துவிட்டாரா என்றும் தாலியை கழட்டி வைத்து விட்டு வைர நகைகளை அணிந்து இப்படி கிளாமராக போஸ் கொடுத்துள்ளாரே என்றும் தாலியுடன் பேபி ஜான் பட புரமோஷனுக்கு கீர்த்தி சுரேஷ் வரும் போது ஃபயர் விட்டதெல்லாம் வீணாகிப்போச்சே என ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X