மாலத்தீவில் சோலோவாக காட்சியளித்த ராஷ்மிகா.. விஜய் தேவரகொண்டா எங்கேம்மான்னு கலாய்க்கும் ஃபேன்ஸ்!
சென்னை: நடிகை ராஷ்மிகா மந்தனாவும், விஜய் தேவரகொண்டாவும் விமானம் மூலம் மாலத்தீவுக்கு விரைந்த போட்டோக்கள் வெளியான நிலையில், இருவருமே காதலித்து வருகிறார்களா? என்கிற கேள்வி பூதாகரமாகி உள்ளது.
பொதுவாக நடிகைகளே மாலத்தீவுக்கு அதிகளவில் சென்று வந்த நிலையில், திடீரென விஜய் தேவரகொண்டா சென்றிருப்பது தான் இந்த சந்தேகத்தை கிளப்பி உள்ளது.
இந்நிலையில், மாலத்தீவில் சோலோவாக நீச்சல் குளம் அருகே இருக்கும் கவர்ச்சி போட்டோவை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட நிலையில், விஜய் தேவரகொண்டா எங்கேம்மான்னு நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

வாரிசுக்கு என்னாச்சு
திடீரென வாரிசு பட நடிகை ராஷ்மிகா மந்தனா மாலத்தீவுக்கு கிளம்பி சென்ற நிலையில், வாரிசு படத்தின் ஷூட்டிங்கிற்கு என்ன ஆனது? என்கிற கேள்வி எழுந்துள்ளது. துணிவு படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போனது போல வாரிசு படத்துக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகி வருகின்றன. விஜய் ரசிகர்களே தளபதி 67 அப்டேட்டுக்காக காத்திருக்கும் நிலையில், வாரிசு படம் திட்டமிட்டப்படி பொங்கலுக்கு வெளியாகுமா? என்கிற கேள்வி கிளம்பி உள்ளது.

விஜய் தேவரகொண்டாவுடன் காதலா
நடிகை ராஷ்மிகா மந்தனா படப்பிடிப்பில் சின்ன பிரேக் கிடைத்தவுடன் பெட்டி படுக்கையை தூக்கிக் கொண்டு மாலத்தீவுக்கு டூர் அடிக்க கிளம்பி விட்டார். ராஷ்மிகாவுடன் கீதா கோவிந்தம் படத்தில் நடித்த விஜய் தேவரகொண்டாவும் கூடவே சென்றதை பார்த்த ரசிகர்கள் இருவருக்கும் காதல் பூத்துவிட்டதா? என கிளப்பி விட்டுள்ளனர்.

மாலத்தீவில் ராஷ்மிகா
மாலத்தீவு செல்வதே போட்டோக்களாக போட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளி ஃபாலோயர்களை ஏற்றத்தானே என்கிற முடிவுக்கே ரசிகர்கள் வரும் அளவுக்கு ஏகப்பட்ட நடிகைகள் பிகினி உடைகளுடன் மாலத்தீவில் போட்டோக்களை போட்டு வந்த நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனா ரெசார்ட்டுக்கு போன கையோடு ஒரு செம ஹாட்டான போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

VD எங்கே
ராஷ்மிகா மந்தனாவை மாலத்தீவில் சோலோவாக பார்த்த ரசிகர்கள் விஜய் தேவரகொண்டா எங்கேம்மான்னு கமெண்டுகளாக போட்டுத் தாக்கி வருகின்றனர். இருவரும் ஒரே ரெசார்ட்டில் இருக்கீங்களா? அல்லது வேறு வேறு ரெசார்ட்டா? லவ் பண்றீங்களா? இல்லையான்னு நச்சரித்து வருகின்றனர்.

போட்டோ எடுத்ததே அவர் தானா
சில நெட்டிசன்கள் ராஷ்மிகா மந்தனாவை இப்படி அழகு சிலையாக வர்ணித்து போட்டோ எடுத்ததே விஜய் தேவரகொண்டாவாகத்தான் இருக்கும் என கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர். கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

ஏற்கனவே பிரேக்கப்
நடிகை ராஷ்மிகா மந்தனா கிரிக் பார்ட்டி படத்தின் மூலமாகத்தான் சினிமாவுக்கே அறிமுகமானார். அந்த படத்தின் நாயகன் ரக்ஷித் ஷெட்டி உடன் ஏற்பட்ட காதல் காரணமாக கடந்த 2017ம் ஆண்டு இருவருக்கும் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும், பின்னர் இருவரும் பிரிந்து விட்டதாகவும் அந்த சமயத்தில் தகவல்கள் பரபரப்பாக பேசப்பட்டன. அதன் பிறகு விஜய் தேவரகொண்டா உடன் நடிகை ராஷ்மிகா காதலில் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் தேவரகொண்டா கூலர்ஸ்
நேற்று விமான நிலையத்தில் விஜய் தேவரகொண்டா அணிந்திருந்த அதே கூலிங் கிளாஸை நடிகை ராஷ்மிகா மந்தனா மாலத்தீவில் அணிந்து போஸ் கொடுத்துள்ளார் என்பது வரை நெட்டிசன்கள் கண்டு பிடித்து இருவரும் ஒன்றாக தான் மாலத்தீவில் மஜா செய்து வருகின்றனர் என சோஷியல் மீடியாவை தெறிக்கவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











