ஆளுநர் பதவி அக்காவுக்கு உறுதி.. பிரபல நடிகையின் ட்ரான்ஸ்ஃபர்மேஷனை பார்த்து பிரமிக்கும் ஃபேன்ஸ்!

சென்னை: பிரபல நடிகை பகிர்ந்துள்ள நவ் அண்ட் தென் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வாயை பிளந்துள்ளனர்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள நடிகைகளில் ஒருவர் நடிகை குஷ்பு. அரசியல், சினிமா, சீரியல், குடும்பம் என பிஸியாக இருந்தாலும் அனைத்தையும் அசால்ட்டாக மேனேஜ் செய்து வருகிறார்.

அதே சமயம் உடல் நலனிலும் மிகுந்த அக்கறையுடன் உள்ளார் குஷ்பு. 50 வயதிலும் வொர்க் அவுட், யோகா என பல நடிகைகளுக்கு முன்னோடியாக இருந்து வருகிறார்.

வயதே தெரியவில்லை

வயதே தெரியவில்லை

50 வயது ஆன போதும் நம்ப முடியாத அளவுக்கு இளமையாகவும் அழகாகவும் உள்ளார் நடிகை குஷ்பு. அவர் ஷேர் செய்யும் போட்டோக்களை பார்க்கும் ரசிகர்களும் இதையே கூறி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு உடம்பை வில்லாக வளைத்து உடற்பயிற்சி மற்றும் யோகா செய்த போட்டோக்களை ஷேர் செய்தார் குஷ்பு.

இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்கள்

இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்கள்

நடிகை குஷ்பு தற்போது நடிகர் ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். மும்பையை பூர்விகமாக கொண்ட குஷ்பு தர்மத்தின் தலைவன் படத்தின் மூலம் கோலிவுட்டில் என்ட்ரியானார். இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

விருதுகளை குவித்துள்ள குஷ்பு

விருதுகளை குவித்துள்ள குஷ்பு

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் இந்தி என பல மொழி படங்களில் நடித்துள்ளார். தமிழக அரசின் விருது கேரள அரசின் விருது என பல விருதுகளையும் குவித்துள்ளார் குஷ்பு. தமிழ் சினிமாவில் ரஜினி காந்த் கமல்ஹாசன், பிரபு, விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார் என பல முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார் குஷ்பு.

சுந்தர் சியுடன் திருமணம் - 2 மகள்கள்

சுந்தர் சியுடன் திருமணம் - 2 மகள்கள்

தற்போதும் சில படங்களில் சப்போர்ட்டிங் ரோலில் நடித்து வருகிறார் குஷ்பு. நடிகை குஷ்பு கடந்த 36 ஆண்டுகளாக சென்னையில் உள்ளார். கடந்த 2000 ஆம் ஆண்டில் இயக்குநர் சுந்தர் சியை திருமணம் செய்து கொண்டார் குஷ்பு. அவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என இரண்டு மகள்கள் உள்ளனர்.

கொழுக் மொழுக் என இருந்த குஷ்பு

கொழுக் மொழுக் என இருந்த குஷ்பு

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தன்னுடைய போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார் குஷ்பு. முன்பு கொழுக் மொழுக் என்று இருந்தார் குஷ்பு. அவருக்காகவே குஷ்பு இட்லி என்ற இட்லியை அறிமுகம் செய்தனர் ரசிகர்கள்.

குஷ்புவுக்கு கோவில் - எடை குறைப்பு

குஷ்புவுக்கு கோவில் - எடை குறைப்பு

இந்த இட்லியும் பெரும் பிரபலமானது. குஷ்புவுக்கு என கோயிலையும் கட்டினர் தமிழ் நாட்டு ரசிகர்கள். இந்நிலையில் தீவிரமாக உடற்பயிற்சி செய்து வந்த குஷ்பு தன்னுடைய எடையை பெருமளவு குறைத்துள்ளார். தான் எடை குறைத்த போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்திலும் ஷேர் செய்து வருகிறார்.

திருமணம் செய்ய விரும்பும் ஃபேன்ஸ்

திருமணம் செய்ய விரும்பும் ஃபேன்ஸ்

பாதிக்கும் மேல் எடையை குறைத்து பிரமிக்க வைத்துள்ளார் குஷ்பு. அண்மையில் மாடர்ன் டிரெஸில் தனது ஸ்லீம் ஃபிட் போட்டோக்களை ஷேர் செய்தார். அந்த போட்டோவை பார்த்த ரசிகர் குஷ்புவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறினார். அதனை பார்த்த குஷ்பு நீங்க ஒரு 21 வருஷம் லேட்டா வந்து இப்படியொரு கேள்வி கேட்டிருக்கீங்க. ஆனாலும், கவலைப்படாதீங்க என் கணவரிடம் ஒரு வார்த்தை இதைப் பற்றி பேசி விட்டு சொல்கிறேன் குசும்பாக பதில் கூறியிருந்தார்.

அப்போதும் இப்போதும் - குஷ்பு மேஜிக்

அப்போதும் இப்போதும் - குஷ்பு மேஜிக்

குஷ்புவின் அந்த போட்டோ பெரும் வைரலானது. லைக்ஸ்களையும் குவித்தது. இந்நிலையில் இன்று மீண்டும் ஒரு போட்டோவை ஷேர் செய்து திணறடித்துள்ளார் குஷ்பு. அதாவது ரசிகர் ஒருவர் 36 ஆண்டுகளுக்கு முன்பும் இப்போதும் என அப்போது எடுத்த போட்டோவையும் இப்போது எடுத்த போட்டோவையும் கம்பேர் செய்து குஷ்பு மேஜிக் என பதிவிட்டுள்ளார்.

பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை..

பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை..

அந்த பதிவை தனது டிவிட்டர் பக்கத்தில் ரீ டிவிட் செய்துள்ள குஷ்பு 36 வருஷங்கள் என பிரமிப்புடன் பகிர்ந்துள்ளார். இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள், பெரிதாக எந்த வித்தியாசமும் இல்லை. உங்களுக்கு 50 வயது என்பதையும் நம்ப முடியவில்லை என்றும் கூறி வருகின்றனர்.

அக்காவுக்கு ஆளுநர் பதவி உறுதி

அக்காவுக்கு ஆளுநர் பதவி உறுதி

நடிகை குஷ்புவின் போட்டோவை பார்த்த இந்த நெட்டிசன், ஆளுநர் பதவி அக்காவுக்கு உறுதியாகிவிட்டது.. உடம்பை குறைத்து ஸ்லிம் ஆகி விட்டீர்கள் வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

குஷ்பு உச்சத்தில் இருந்த நேரம்

குஷ்பு உச்சத்தில் இருந்த நேரம்

குஷ்புவின் போட்டோவை பார்த்த இந்த நெட்டிசன், சின்னத்தம்பி சமயம் குஷ்பு உச்சத்தில் இருந்த நேரம். தமிழர்களுக்கு பிடித்து போனதால் கோயில், அரசியல் கட்சி தாவல் என்று பல்வேறு முகம் என பதிவிட்டுள்ளார்.

Recommended Video

V-CONNECT | KHUSHBOO CHAT PART-03 | குஷ்பு கொடுத்த அண்ணாத்த UPDATE | FILMIBEAT TAMIL
திரும்பவும் வாங்க மேம்

திரும்பவும் வாங்க மேம்

மற்றொரு ரசிகரான இவர், வாவ்.. கடவுளே ஏன் இவர் இவ்வளவு அற்புதமாக இருக்கிறார்.. திரும்பவும் வாங்க மேம்.. உங்களுக்கான ராக்கிங் டைம்ஸ்.. இந்த போட்டோக்களை ஷேர் செய்து உங்கள் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுப்பதற்கு நன்றி.. உங்களுக்கு முழு அன்பையும் மரியாதையையும் அனுப்புகிறேன்.. ஒரு ஃபேன் பாய்.. என பதிவிட்டுள்ளார்.

இளம் பெண்களுக்கு டிப்ஸ் கொடுங்கள்

இளம் பெண்களுக்கு டிப்ஸ் கொடுங்கள்

மற்றொரு ரசிகரான இவர், நம்ப முடியவில்லை மேம்.. மாஷாஅல்லாஹ்,

இளம் பெண்களுக்கு மோட்டிவேஷன் மற்றும் இன்ஸ்பைரேஷன் அளிக்கும் சில குறிப்புகளை கொடுங்கள்.. அப்படி பகிர விரும்பாவிட்டால் பெண்களை பொறாமையுடன் குழப்பமடையச் செய்யுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

எடையை குறைக்க என்ன செய்தீர்கள்?

எடையை குறைக்க என்ன செய்தீர்கள்?

மற்றொரு ரசிகரான இவர், நீங்கள் இவ்வளவு எடையை குறைக்க என்ன செய்தீர்கள்.. லுக்கிங் ஃபென்டாஸ்டிக் என்று பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

அழகு என்ற வார்த்தை கூட கூடுதல் அழகாகிறது

அழகு என்ற வார்த்தை கூட கூடுதல் அழகாகிறது

குஷ்புவின் போட்டோவை பார்த்த இந்த ரசிகை அழகு என்ற வார்த்தை கூட கூடுதல் அழகாகிறது. அந்த அழகை உன்னிடத்தில் பார்க்கும் போது என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X