»   »  புதுமுக நடிகையின் வசம் 7 படங்கள்: கீர்த்திக்கு போட்டி இவர் தானோ?

புதுமுக நடிகையின் வசம் 7 படங்கள்: கீர்த்திக்கு போட்டி இவர் தானோ?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கீர்த்தி சுரேஷின் முன்னேற்றத்தை பார்த்து வியக்கும்போது புதுமுகமான லீசா எக்லேர்ஸின் கையில் 7 படங்கள் உள்ளது பலரையும் பிரமிக்க வைத்துள்ளது.

கீர்த்தி கோலிவுட்டுக்கு வந்து இதுவரை 4 படங்கள் ரிலீஸாகியுள்ளன. ஒரு படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. பைரவா மற்றும் தானா சேர்ந்த கூட்டத்தில் நடித்து வருகிறார். ஆக மொத்தம் 7 படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் புதுமுகமான லீசா எக்லேர்ஸின் வசம் 7 படங்கள் உள்ளன.

லீசா

லீசா

விஜய் வசந்த் ஹீரோவாக நடிக்கும் மை டியர் லீசா படத்தில் நடிக்கிறார் லீசா. அவரின் முதல் படம் கூட ரிலீஸாகாத நிலையிலேயே அம்மணி வசம் இத்தனை புதுப்படங்கள்.

பலே வெள்ளையத்தேவா

பலே வெள்ளையத்தேவா

பெரிய கண்களுடன் அழகாக இருக்கும் லீசா சிரிக்க விடலாமா படத்திற்காக தான் முதலில் ஒப்பந்தம் ஆனார். பிரியமுடன் பிரியா, பிடிச்சிருக்கு அசோக், பொது நலம் கருதி, மடைதிறந்து, சசிகுமாரின் பலே வெள்ளையதேவா ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

கதாபாத்திரம்

கதாபாத்திரம்

ஹீரோயின் தவிர இரண்டாவது ஹீரோயின் கதாபாத்திரங்களிலும் நடிக்க ஒப்புக் கொள்கிறார் லீசா. என் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருப்பதால் இரண்டாவது ஹீரோயினாக நடிப்பதில் தயக்கம் இல்லை என்கிறார் லீசா.

புதுமுகம்

புதுமுகம்

நான் ஒரு புதுமுகம். அதனால் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்த வேண்டும் என நினைக்கிறேன். நடிப்புக்கு நல்ல ஸ்கோப் உள்ள கதாபாத்திரங்கள் வரும்போது அதை ஏற்க நான் ஏன் தயங்க வேண்டும் என லீசா கேட்கிறார்.

English summary
New comer Leesha Eclairs has seven movies in her kitty. She is ready to act as second heroine also if her character is important.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil