»   »  நிக்கோலின் தொழில் பக்தி

நிக்கோலின் தொழில் பக்தி

Subscribe to Oneindia Tamil
Nicholeen
புது வரவான நடிகை நிக்கோலுக்கு தொழில் பக்தி ரொம்ப ஜாஸ்தி போலிருக்கிறது.

சமீபத்தில் ஊட்டில் நடந்த சூட்டிங்கின்போது ஜுரத்தாலும் குளிராலும் அவதிப்பட்டாலும் கூடவே ஒரு டாக்டரை துணைக்கு வைத்துக் கொண்டு நடித்துக் கொடுத்து தயாரிப்பாளர் பிளஸ் இயக்குனரின் பாராட்டை அள்ளியிருக்கிறார்.

இப்போது கல்யாண கலாட்டா நியூசில் பரபரப்பாக இருக்கும் டிவி நடிகை காவேரியின் உறவினர் தான் இந்த நிக்கோல். ஆங்கிலோ இந்திய கலப்புத் தம்பதிக்குப் பிறந்தவர். முதலில் மாடலிங்கில் நுழைந்து தேறாமல், தெலுங்கில் ஜோக்கர் ஒருவருடன் முதல் படத்தில் ஹீரோயினாக நடித்தார்.

நிக்கோலின் கிளாமரும் ஒத்துழைப்பும் அனைவருக்கும் பிடித்துப் போய்விடவே தெலுங்கில் சில படங்களில் புக் ஆனார். அங்கு ஒரு படத்தில் நடிக்கப் ேபான நடிகர் கம் பைனான்சியர் ஜெய் ஆகாஷுக்கு நிக்கோலைப் பிடித்துப் போக தமிழுக்குக் கூட்டி வந்தார்.

அவர் கதாநாயகனாக நடிக்கும் அடடா என்ன அழகு படத்தில் நிக்கோல் தான் ஹீரோயின்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடந்தது. டிசம்பர் மாதக் குளிரில் ஊட்டிக்காரர்களே நடுங்கி ஆடும் நிலையில் இந்தப் படத்தின் யூனிட் படாதபாடு பட்டுவிட்டதாம்.

குளிர் மற்றும் பனிப் பொழிவில் நிக்கோலை பல நாட்கள் டான்ஸ் ஆட விட்டதில் அவருக்கு கடுமையான குளிர் காய்ச்சல் ஏற்பட்டுவிட்டதாம். ஆனால், அவரை வைத்து மேலும் பல காட்சிகளை எடுக்க யூனிட் தயாராக இருந்ததால் தன்னால் யாருக்கும் சிரமம் வேண்டாம் என தொடர்ந்து நடித்தாராம் நிக்கோல்.

ஆனாலும் ஒரு கட்டத்தில் நிக்கோலுக்கு குளிர் ஜுரம் ஆட்டவே டாக்டர் வரவழைக்கப்பட்டாராம். அவர் கொடுத்த மருந்து மாத்திரைகளை உண்டபடி காய்ச்சலுடனே கடும் குளிரில் அவுட்டோர் படப்பிடிப்பில் நடித்துக் ெகாடுத்தாராம் நிக்கோல். பாடல் காட்சிக்கு நடனமும் ஆடினார்.

அதே போல கதாநாயகன் ஜெய் ஆகாஷுக்கும் காலில் அடிபட்டாலும் அவரும் டாக்டரின் சிகிச்சையைப் பெற்றபடியே பாடல் காட்சியில் ஆடி முடித்தாராம்.

பரவாயில்லையே நிக்கோல்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil