For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஈஸ்வரன் பட நடிகை நிதி அகர்வாலா இது.. சேலையில் பார்க்க மகாலட்சுமி மாதிரி இருக்காங்களே!

  |

  சென்னை : நடித்த இரண்டு திரைப்படங்களும் ஒரே நேரத்தில் வெளியானதால் செம குஷியில் இருக்கிறார் நடிகை நிதி அகர்வால்.

  பூமி சுமாரான வெற்றியை கொடுத்திருந்தாலும் ஈஸ்வரன் இவரை தமிழ் ரசிகர்களின் மத்தியில் பிரபலமாகி உள்ளது.

  இப்பொழுது தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ள பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடித்து வரும் நிதி அகர்வால் இதுவரை எடக்கு மடக்காக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்த நிலையில் இப்போது முதல் முறையாக சேலையில் பார்க்க மகாலட்சுமி மாதிரி தோன்றும் படங்களை வெளியிட்டு வைரல் ஆகி வருகிறார்.

  சினிமேக்ஸ் நிகழ்ச்சியில் கமலியிடம் கேளுங்கள்… நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் புது முயற்சி !சினிமேக்ஸ் நிகழ்ச்சியில் கமலியிடம் கேளுங்கள்… நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் புது முயற்சி !

   கவர்ச்சி காட்டுவதை

  கவர்ச்சி காட்டுவதை

  பொதுவாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகைகள் ஆரம்பத்தில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து விட்டு போகப் போக கவர்ச்சி காட்டுவதை ஒரு ஃபார்முலாவாக வைத்திருப்பார்கள் ஆனால் நடிகை நிதி அகர்வால் அதில் சற்று வித்தியாசமானவர். அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே கவர்ச்சியில் தாறுமாறு காட்டி ரசிகர்களை கலங்கடித்துள்ளார்.

  மூன்றாம் முறையாக

  மூன்றாம் முறையாக

  இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து இருந்த ஈஸ்வரன் திரைப்படமும், லக்ஷ்மண் இயக்கத்தில் ஜெயம்ரவி மூன்றாம் முறையாக நடித்த பூமி திரைப்படமும் ஒரே நேரத்தில் பொங்கலை முன்னிட்டு வெளியானது. இவ்விரண்டு திரைப்படங்களிலும் நடிகையை நிதி அகர்வால் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இதில் பூமி சுமாரான வெற்றியைப் பெற்று இருந்தாலும் ஈஸ்வரன் மிகப்பெரிய வெற்றி பெற்று நிதி அகர்வாலை தமிழ் சினிமாவில் வெற்றி நாயகியாக உருவாக்கியது.

  ஹரிஹர வீர மல்லு

  ஹரிஹர வீர மல்லு

  இப்பொழுது இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் சூப்பர் ஹிட் திரில்லர் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதன் படப்பிடிப்பு மிக விரைவிலேயே தொடங்க உள்ளது. தெலுங்கிலும் இவருக்கு வாய்ப்புகள் நிரம்பி வழிகிறது. அந்த வகையிலே பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடித்து வரும் ஹரிஹர வீர மல்லு திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். பிரம்மாண்ட பொருட்செலவில் சரித்திர திரைப்பட பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு தெலுங்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு இருக்கிறது. க்ரிஷ் இந்த படத்தை இயக்கி வருகிறார்.

  மிரட்டலான ஃபர்ஸ்ட்

  மிரட்டலான ஃபர்ஸ்ட்

  இந்தியிலிருந்து பட வாய்ப்புகள் வந்தாலும் இப்போதைக்கு தள்ளிவைத்துவிட்டு முதலில் தென்னிந்தியாவில் கொடியை நாட்ட வேண்டும் என பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிதி அகர்வால் தெலுங்கில் ஹீரோ என்ற மற்றொரு திரைப்படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை ஸ்ரீராம் ஆதித்யா இயக்க அசோக் கல்லா ஹீரோவாக நடிக்கிறார் இதன் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது.

  மகாலட்சுமி

  மகாலட்சுமி

  தமிழில் கைவசம் ஒரே ஒரு திரைப்படத்தில் மட்டும் ஒப்பந்தமாகி இருப்பதால் முன்னணி படங்களில் நடிப்பதற்காக அடிக்கடி கட்டுப்படுத்த முடியாத கவர்ச்சி புகைப்படங்களை தாராள மனதுடன் சமூக வலைதளங்களில் கண்டபடி பகிர்ந்து வந்த நிதி இப்பொழுது தளும்ப தளும்ப சேலையுடன் பார்ப்பதற்கே மகாலட்சுமி போல காட்சியளிக்கும் ட்ரெடிஷ்னல் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களால் வர்ணிக்கப்படுகிறார்.கண்ணுக்கு குளிர்ச்சியா போட்டோ போடுவீங்கன்னு பாத்தா அதிசயமா புடவையில் இருக்கீங்க ,போன்ற நக்கலான கமெண்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனர் நெட்டிசன்ஸ் .

  English summary
  Easwaran movie heroine Nidhi Agarwal is looking stunning in her new saree costume.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X