»   »  பாயும் புலியில் விஷாலுடன் குத்தாட்டம் போடும் நிகிதா

பாயும் புலியில் விஷாலுடன் குத்தாட்டம் போடும் நிகிதா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சரோஜா படத்தில் "கோடான கோடி..." என்ற பாடலுக்கு ஆட்டம் போட்டு தமிழக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நிகிதா மீண்டும் விஷால் நடிக்கும் பாயும் புலி படத்தில் குத்தாட்டம் போட வருகிறாராம்.

தமிழில் ‘குறும்பு' படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நிகிதா. இப்படத்திற்கு பிறகு ‘சத்ரபதி', ‘வெற்றிவேல் சக்திவேல்' ஆகிய படங்களில் நடித்தார். கடைசியாக கார்த்தி நடிப்பில் வெளிவந்த ‘அலெக்ஸ் பாண்டியன்' படத்தில் நடித்திருந்தார்.


கன்னடத்தில் பிஸி

கன்னடத்தில் பிஸி

நீண்ட காலமாக கன்னட மொழிப் படங்களில் பிசியாக நடித்து வந்த நிகிதா தற்போது தமிழில் மீண்டும் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடிவுள்ளார்.


விஷால் உடன் ஆட்டம்

விஷால் உடன் ஆட்டம்

சுசீந்திரன் இயக்கத்தில் விஷால்-காஜல் அகர்வால் ஜோடியாக நடித்து வரும் ‘பாயும் புலி படத்தில் விஷாலுடன் இணைந்து ஒரு குத்துப்பாட்டுக்கு நடனம் ஆடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


சரோஜாவில் ஆட்டம்

சரோஜாவில் ஆட்டம்

இவர் ஏற்கனவே வெங்கட் பிரபு இயக்கிய ‘சரோஜா' படத்தில் ‘கோடான கோடி...' என்ற பாடலுக்கு குத்தாட்டம் ஆடினார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. மேடைகளிலும் ரியாலிட்டி ஷோக்களிலும் அந்த நடனம் இன்றைக்கும் ஆடப்பட்டு வருகிறது.


மார்க்கெட்டில் ஆட்டம்

மார்க்கெட்டில் ஆட்டம்

பாயும் புலி படத்தில் இமான் இசையமைத்துள்ள பாடலுக்கு சென்னை பின்னி மில்லியில் மார்க்கெட் போன்று செட் அமைத்து பாடல் காட்சியை படமாக்கி வருகிறார்கள். இதில் விஷாலுடன் ஆடியுள்ளார் நிகிதா. இப்பாடலும் ‘கோடான கோடி...' பாடல் போல் அதிகம் வரவேற்பு பெறும் என்று தமிழ் சினிமா உலகில் பேசப்பட்டு வருகிறது.


English summary
Kannada actress Nikita Thukral has been roped in for a special folk number in Vishal Krishna Reddy-starrer Tamil actioner "Paayam Puli".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil