»   »  டூப் போடாமல் கராத்தே பண்ணப் போய் கை விரலை உடைத்துக் கொண்ட ‘டார்லிங்’ நிக்கி கல்ராணி

டூப் போடாமல் கராத்தே பண்ணப் போய் கை விரலை உடைத்துக் கொண்ட ‘டார்லிங்’ நிக்கி கல்ராணி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எழிலின் இயக்கத்தில் விஷ்ணு விஷால் ஜோடியாக நடித்து வரும் புதிய படத்தில் சண்டைக் காட்சி ஒன்றில் நடித்தபோது, நிக்கி கல்ராணிக்கு கை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘டார்லிங்', ‘யாகாவராயினும் நாகாக்க' உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் நிக்கி கல்ராணி. தமிழ் மட்டுமின்றி மலையாள, கன்னட படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

தற்போது இவர் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக எழில் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

போலீஸ் வேடம்...

போலீஸ் வேடம்...

இப்படத்தில் நிக்கி கல்ராணி போலீஸ் வேடத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கென சண்டைக் காட்சிகளிலும் அவர் நடித்து வருகிறார்.

சண்டைக் காட்சி...

சண்டைக் காட்சி...

இந்நிலையில், சமீபத்தில் படமாக்கப்பட்ட கராத்தே சண்டைக் காட்சி ஒன்றில் நிக்கி கல்ராணி நடித்தார். அப்போது டூப் இல்லாமல் அவரே நேரடியாக அக்காட்சியில் நடித்துள்ளார்.

காயம்...

காயம்...

இதில் எதிர்பாராத விதமாக நிக்கி கல்ராணியில் கை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டதாகவும், நிக்கி கல்ராணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோ 2...

கோ 2...

இந்தப் படம் மட்டுமின்றி நிக்கி கல்ராணி தற்போது ‘கோ 2', ‘மொட்ட சிவா கெட்ட சிவா' ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

English summary
looks like Nikki Galrani has taken her cop role in Ezhil's film seriously and landed herself in trouble. The bold actress, who has said no to using a body double for stunt sequences for the under production film with Vishnu Vishal, has injured her right hand on the set.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil