»   »  ரஜினியின் வெறித்தன ரசிகையாக நிக்கி கல்ராணி... 'பக்கா' சர்ப்ரைஸ்!

ரஜினியின் வெறித்தன ரசிகையாக நிக்கி கல்ராணி... 'பக்கா' சர்ப்ரைஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
ரசிகர் காலில் விழுந்த சூர்யா முதல்.. சிம்பு ஓவியா திருமணம் வரை.. சினிமா ஒரு பார்வை

சென்னை : அறிமுக இயக்குநர் எஸ்.எஸ்.சூர்யா இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் படம் 'பக்கா'. நிக்கி கல்ராணி, பிந்து மாதவி இருவரும் இப்படத்தில் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். 'பக்கா' படத்துக்கு சத்யா இசை அமைத்திருக்கிறார்.

இந்த படத்தின் டீசர் வெளியிட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவுக்கு கதாநாயகன் விக்ரம் பிரபு வரவில்லை. ஈ.சி.ஆர் தாண்டி படப்பிடிப்பில் இருப்பதாக கதாநாயகி நிக்கி கல்ராணிக்கு மெஸேஜ் அனுப்பியிருந்தார் விக்ரம் பிரபு.

Nikki galrani acts as diehard fan of rajini

விக்ரம் பிரபு அனுப்பிய மெசேஜை மேடையில் பேசும்போது வாசித்துக் காட்டினார் நிக்கி கல்ராணி. ஆனால், 'பக்கா' படத்தின் இயக்குநர் சூர்யாவுக்கும், விக்ரம் பிரபுவுக்கும் படப்பிடிப்பில் கருத்து மோதல் ஏற்பட்டதால் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

Nikki galrani acts as diehard fan of rajini

டீசர் வெளியீட்டு விழாவில் பேசிய நிக்கி கல்ராணி, "நான் இந்தப் படத்தில் ரஜினி சாரின் ரசிகையாக 'ரஜினி ராதா' எனும் கேரக்டரில் நடிக்கிறேன். நிஜத்திலும் நான் ரஜினி சாரின் ரசிகை என்பதால் இந்தப் படத்தில் ரொம்பவும் என்ஜாய் பண்ணி நடித்தேன்.

இந்தப் படத்தில் விக்ரம் பிரபு இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். அவருடைய இரண்டாவது கெட்டப் சர்ப்ரைஸாக இருக்கும்" என்றார். படத்தில் அவரது கேரக்டரையும், விக்ரம் பிரபு டபுள் ஆக்‌ஷன் விஷயத்தையும் சொல்லி சஸ்பென்ஸை உடைத்துவிட்டார் நிக்கி கல்ராணி.

English summary
Vikram Prabhu, Nikki galrani and Bindhu Madhavi are plays lead roles in the film 'Pakka'. The teaser launch ceremony of this film was held yesterday. Speaking at the Teaser launch, Nikki galrani said, "I act in the role of 'Rajini Radha' as Rajini sir's diehard fan'".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil