»   »  சண்டை போடுவதும், பிறரை அடிப்பதும் ஜாலியாக இருக்கு: நிக்கி கல்ராணி

சண்டை போடுவதும், பிறரை அடிப்பதும் ஜாலியாக இருக்கு: நிக்கி கல்ராணி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிறருடன் சண்டை போடுவதும், அவர்களை அடிப்பதும் ஜாலியாக இருப்பதாக தெரிவித்துள்ளார் நடிகை நிக்கி கல்ராணி.

எழில் இயக்கத்தில் விஷால் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயர் வைக்கப்படாத அந்த படத்தில் விஷால் ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்து வருகிறார். படத்தில் நிக்கி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

Nikki Galrani finds beating up people as so much fun

70 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இன்னும் 2 பாடல் காட்சிகளும், கிளைமாக்ஸும் தான் படமாக்கப்பட வேண்டி உள்ளது.

இந்நிலையில் படம் குறித்து நிக்கி கூறுகையில்,

இந்த படத்தில் நடிப்பது ஜாலியாக உள்ளது. சண்டை போடுவதும், பிறரை அடித்து நொறுக்குவதும் இவ்வளவு ஜாலியாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. படத்தில் என் அறிமுகமே சண்டை காட்சியில் தான்.

Nikki Galrani finds beating up people as so much fun

அந்த சண்டை காட்சியில் நடிக்க நான் 20 நாட்கள் சிறப்பு பயிற்சி எடுத்துக் கொண்டேன். நான் மீண்டும் எனக்காக டப்பிங் பேசுவது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றார்.

English summary
Nikki Galrani who is playing a cop role in Ezhil's upcoming movie with Vishal finds beating up people as fun.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil