»   »  புயல் வேகத்தில் நிக்கி கல்ராணி… கலக்கத்தில் மற்ற நடிகைகள்!

புயல் வேகத்தில் நிக்கி கல்ராணி… கலக்கத்தில் மற்ற நடிகைகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழில் டார்லிங் படம் மூலம் அறிமுகமானவர் நிக்கி கல்ராணி. அதன்பின் ஆதி ஜோடியாக யாகாவாராயினும் நாகாக்க, பாபி சிம்ஹா ஜோடியாக கோ2 படங்களில் நடித்தார். ஆனால் நிக்கி கல்ராணிக்கு பெரிய அடையாளமாக அமைந்தது வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் வெற்றி தான்.

Nikki Galrani is signing spree

இத்தனைக்கும் அந்த படத்தில் பெரிய கேரக்டரும் கிடையாது. வழக்கமான ஹீரோயின் தான். ஆனால் பட வெற்றி நிக்கியை பிரபலமாக்கியுள்ளது. நிக்கி கல்ராணி கையில் இப்போது ஐந்து படங்கள். லாரன்ஸ் ஜோடியாக மொட சிவா கெட்ட சிவா, ஜிவிபிரகாஷ் ஜோடியாக கடவுள் இருக்கான் கொமாரு, விக்ரம் பிரபு ஜோடியாக நெருப்புடா படங்களில் நடிக்கும் நிக்கி கல்ராணிக்கு வாய்ப்புகள் தேடிக் குவிகின்றன.

காரணம் சின்ன ஹீரோ, பெரிய ஹீரோ என்ற பாகுபாடு பார்க்காமல் எல்லோருடனும் சமமாக நட்பு பாராட்டுகிறாராம். நட்பு வட்டத்தில் இல்லாத ஆளாக இருந்தாலும் வலிய பேசி நட்பு வட்டத்தில் இணைத்துவிடுகிறாராம். நிக்கி ஃப்ரெண்ட்ஸ் என்று ஏதாவது வாட்ஸ் அப் க்ரூப்பில் இருந்து அழைப்பு வந்தால் அதற்கு அட்மின் நிக்கி கல்ராணிதானா என்பதை செக் செய்துகொள்ளுங்கள்...!

English summary
Nikki Galrani is in cloud nine and signing many new movies now.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil