»   »  "டார்லிங் பேய்"க்கு கையில் காயம்.. கராத்தே பயிற்சியின்போது அடிபட்டதால்!

"டார்லிங் பேய்"க்கு கையில் காயம்.. கராத்தே பயிற்சியின்போது அடிபட்டதால்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: "டார்லிங்" படத்தில் நடித்த நிக்கி கல்ராணிக்கு அவர் புதியதாக நடித்து வருகின்ற படத்தின் படப்பிடிப்பின்போது கையில் காயம் ஏற்பட்டுள்ளதாம்.

எழில் இயக்கும் புதிய படம் "வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்". விஷ்ணு கதாநாயகனாக நடித்து இந்த படத்தை தயாரிக்கிறார்.

நிக்கி கல்ராணி, சூரி, ரோபோ சங்கர், ரவிமரியா, நான் கடவுள் ராஜேந்திரன் உள்பட பலர் நடிக்கிறார்கள். சக்தி ஒளிப்பதிவு செய்கிறார். சத்யா இசை அமைக்கிறார்.

போலீஸ் வேலைக்காக:

போலீஸ் வேலைக்காக:

இந்த படத்தில் போலீஸ் வேலைக்கு முயற்சி செய்யும் பெண்ணாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். இதற்காக அவர் உடற்பயிற்சி செய்வது போலவும், விளையாட்டு பயிற்சியில் ஈடுபடுவது போலவும் காட்சிகள் படமாக்கப்பட்டன. கராத்தே கற்றுக் கொள்வது போன்ற காட்சியும் படமாக்கப்பட்டது.

ஆவேசமாக உடைத்தார்:

ஆவேசமாக உடைத்தார்:

கராத்தே பயிற்சி செய்யும் போது நிக்கி கல்ராணி, கையால் ஓடுகளை அடித்து நொறுக்குவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. அப்போது அவர் முன்பு அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஓடுகளை ஆவேசமாக உடைத்தார்.

அய்யோ டம்மியா:

அய்யோ டம்மியா:

அது டம்மி ஓடுகள். இதுபற்றி நிக்கி கல்ராணியிடம் சொல்ல வில்லை. உண்மையான ஓடுகள் என்று அவர் நினைத்ததால் கை முட்டியால் ஓடுகளை வேகமாக தாக்கினார்.

சின்னதா ஒரு காயம்:

சின்னதா ஒரு காயம்:

அப்போது டம்மி ஓடுகள் உடைந்து சிதறின. இதில் அவருக்கு சிராய்ப்பு காயம் ஏற்பட்டது. உடனே முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுபற்றி பேசிய நிக்கி கல்ராணி, "நான் சிறு வயதில் கராத்தே கிளாசுக்கு போய் இருக்கிறேன். அதனால் ஓடுகளை உடைப்பதை பெரிதாக நினைக்கவில்லை.

இயற்கையாக அமைய:

இயற்கையாக அமைய:

அங்கு வைக்கப்பட்டிருந்தது டம்மி ஓடு என்பதை சொல்லவில்லை. காட்சி இயற்கையாக அமைய வேண்டும் என்று வேகமாக உடைத்தேன். இதனால் சிறிய தடுமாற்றம் ஏற்பட்டது. கையில் சிறிய காயம்தான் பிரச்சினை எதுவும் இல்லை" என்றார்.

English summary
Nikki kalrani got a fewer most injury in her hand at the time of Karate scene.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil