லைக்குகளை அள்ளும் நிக்கி கல்ராணியின் பிராங்க் வீடியோ

சென்னை : ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்த டார்லிங் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தார் நிக்கி கல்ராணி. படிப்படியாக வளர்ந்து தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மொழி சினிமாக்களில் பிஸியான நடிகையாக வளர்ந்து விட்டார் நிக்கி கல்ராணி.

Recommended Video

லைக்குகளை அள்ளும் நிக்கி கல்ராணியின் பிராங்க் வீடியோ

தமிழில் இவர் சமீபத்தில் சசிக்குமாருடன் இணைந்து ராஜவம்சம் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் நேற்று தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்டது. கூட்டு குடும்பத்தை மையமாகக் கொண்ட கதை என்பதால் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

BTS வீடியோ

BTS வீடியோ

இந்நிலையில் ராஜவம்சம் பட ரிலீசை முன்னிட்டு, இந்த படத்தின் BTS வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். ராஜவம்சம் படத்தின் பாடல் ஒன்றின் ஷுட்டிங்கின் போது இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அதில் தன்னை நோக்கி எரியப்படும் பலூன்களை உடைத்து நிக்கி கல்ராணி சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருக்கிறார்.

பிராங்க் செய்த படக்குழு

பிராங்க் செய்த படக்குழு

சிறு குழந்தை போல் பலூன்களை நிக்கி கல்ராணி உடைத்துக் கொண்டிருக்கிறார். அப்போது ஒரு பலூனில் தண்ணீரை நிரப்பி அவர் மீது எரிந்துள்ளனர். அந்த பலூனை நிக்கி கல்ராணி உடைக்க, அதிலிருந்து தண்ணீர் அவர் மீது கொட்டுகிறது. இதனால் ஷக்காகி, பரிதாபமாக முகத்தை வைத்து, திருதிருவென விழித்துக் கொண்டிருக்கிறார்.

குவியும் லைக்குகள்

குவியும் லைக்குகள்

பலூன்களை எரிந்து, தன்னை பிராங்க் செய்துள்ளதை மிக தாமதமாக தான் புரிந்து கொண்டிருக்கிறார். இதனால் கடுப்பாகி தன்னுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறு குழந்தை நடிகர்களை துரத்திக் கொண்டு ஓடுகிறார் நிக்கி கல்ராணி. இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் லைக்குகளை அள்ளி வருகிறது.

அடுத்து நடிக்கும் படங்கள்

அடுத்து நடிக்கும் படங்கள்

ராஜவம்சம் படத்தை தொடர்ந்து நிக்கி கல்ராணி, ராம்பாலா இயக்கும் காமெடி பேய் படமான இடியட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மிர்ச்சி சிவா லீட் ரோலில் நடித்து வருகிறார். மலையாளத்தில் Meri Awaz Suno படத்திலும் மிக முக்கிய ரோலில் நிக்கி கல்ராணி நடித்து வருகிறார். இந்த படத்தில் ஜெயசூர்யா, மஞ்சு வாரியர், ஷிவாதா ஆகியோர் நடித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X