காஞ்சனா 3 பட நடிகையை கதறவிட்ட இயக்குநர்.. கண்ணீருடன் வீட்டுக்கு சென்றேன் என பரபர குற்றச்சாட்டு!

மும்பை: தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ள நடிகை நிக்கி டம்போலி தென்னிந்திய இயக்குநர் ஒருவர் தன்னிடம் மோசமாக நடந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

சல்மான் கான் தொகுத்து வழங்கிய இந்தி பிக் பாஸ் சீசன் 14 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி உள்ளார் நிக்கி டம்போலி.

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான காஞ்சனா 3 படத்தில் ஓவியா மற்றும் வேதிகாவுடன் இணைந்து இவரும் நடித்திருந்தார்.

இருட்டு அறையில் முரட்டு குத்து

இருட்டு அறையில் முரட்டு குத்து

இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் தெலுங்கில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை நிக்கி டம்போலி. அந்த படத்தில் படு கவர்ச்சியாக நடித்த நிக்கி டம்போலி அடுத்ததாக திப்பரா மீசம் எனும் தெலுங்கு படத்திலும் இவர் நடித்துள்ளார்.

லாரன்ஸ் இயக்கத்தில்

லாரன்ஸ் இயக்கத்தில்

நிக்கி டம்போலியின் டான்ஸ் சூப்பராக இருப்பதை பாராட்டிய ராகவா லாரன்ஸ் அவர் இயக்கி நடித்த காஞ்சனா 3 படத்தில் ஓவியா மற்றும் வேதிகாவுடன் இணைந்து நடிக்க வைத்தார். தமிழில் நிக்கி டம்போலி காஞ்சனா 3 படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அவர் போட்ட கவர்ச்சி குத்தாட்டத்திற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இன்னமும் உள்ளனர்.

இந்தி பிக் பாஸ்

இந்தி பிக் பாஸ்

சல்மான் கான் தொகுத்து வழங்கிய இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 14வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார் நிக்கி டம்போலி. மேலும், இரண்டாவது ரன்னர் அப்பாக கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி வரை சர்வைவ் பண்ணி அசத்தினார். இந்நிலையில், நிக்கி டம்போலி சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய போது, தென்னிந்திய இயக்குநர் ஒருவர் தன்னிடம் ரொம்ப மோசமாக நடந்து கொண்டார் என பேசியது பரபரப்பை கிளப்பி உள்ளது.

அந்த இயக்குநர் ரொம்ப மோசம்

அந்த இயக்குநர் ரொம்ப மோசம்

தென்னிந்திய இயக்குநர் ஒருவர் சூட்டிங் ஸ்பாட்டில் தன்னிடம் ரொம்பவே மோசமாக நடந்து கொண்டார் என்றும், மோசம் என்றால் அந்த மாதிரி நடந்து கொள்ளவில்லை. வெளிநாட்டில் டான்ஸ் ஆடிக் கொண்டிருந்த போது, மற்ற நடனக் கலைஞர்களை நடத்தியது போல தன்னை நடத்தவில்லை என்றும் ரொம்பவே கீழ்த்தரமாக நடத்தினார் என்றுள்ளார்.

கதறி அழுதேன்

கதறி அழுதேன்

அந்த சூட்டிங் ஸ்பாட்டில் வீட்டில் அழுது கொண்டே போனேன். என் பெற்றோர்களுக்கும் அந்த நிகழ்வு நன்றாக நினைவில் இருக்கும் எனக் கூறி பரபரப்பை கிளப்பி உள்ளார். ஆனால், எந்த இயக்குநர் என்பதை தான் சொல்ல மாட்டேன் என்றும், தற்போது அவருடன் பிரச்சனை இல்லை என்றும், இன்று காலை கூட அவர் தனக்கு மெசேஜ் செய்தார் என்றும் பேசி கவனத்தை ஈர்த்துள்ளார்.

எந்த இயக்குநர்

எந்த இயக்குநர்

நடிகை நிக்கி டம்போலி இதுவரை நடித்த படங்கள் மொத்தமே மூன்று தான். மூன்றும் தென்னிந்திய படங்கள் தான். இயக்குநர் சந்தோஷ் பி. ஜெயக்குமாரை சொல்கிறாரா? ராகவ லாரன்ஸை சொல்கிறாரா? அல்லது திப்பர மீசம் படத்தை இயக்கிய கிருஷ்ணா விஜய்யை சொல்கிறாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X