»   »  அட, வாங்கோண்ணா!

அட, வாங்கோண்ணா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மருதமலை, கில்லாடி என இரு படங்கள் மட்டுமே கையில் இருப்பதால், வேறு தயாரிப்பாளர்கள் தன் பக்கம் கூட திரும்பிப் பார்க்காமல் டபாய்ப்பதாலும், விரக்தியாகி விட்ட நிலா, புது ஆல்பத்ததைத் தயாரித்து உலா விட்டு வாய்ப்பு கேட்டு வருகிறார்.

எங்குமே போண்டியாகாதவர்கள் கூட தமிழ் சினிமா பக்கம் வந்து விட்டால் போதும், டப்பையும் தேற்றிக் கொண்டு பந்தாவையும் பக்காவாக ஏற்றிக் கொண்டு தயாரிப்பாளர்களையும், இயக்குநர்களையும் பந்தாட்டம் ஆடி விடுவார்கள்.

அதற்கு நல்ல உதாரணம் நிலா. எஸ்.ஜே.சூர்யாவில் தூக்கி வரப்பட்ட நிலா, வந்த புதிதில் செய்த அலம்பல் இருக்கிறதே, அப்பப்பா, அம்மம்மா. இந்த அக்கப்போர் எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான்.

பிரஷாந்த் பட ஷூட்டிங்கிலிருந்து பாதியில் ஓடிப் போய் ஹைதராபாத்தில் உட்கார்ந்து கொண்டு, இயக்குநரும், தியாகராஜனும் டெல்லிக்குப் போய் மன்னிப்பு கேட்ட பிறகே மீண்டும் கோலிவுட்டுக்குத் திரும்பினார்.

ஆனால் அதன் பின்னர் நிலாவை தயாரிப்பாளர்கள் கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கத் தொடங்கினர். எந்த தெலுங்கு சினிமாவை நம்பி தமிழை திராட்டில் விட்டாரோ அந்த தெலுங்கு நிலாவை தூக்கி விசிறி அடித்து விட்டது. இதனால் மீண்டும் தமிழுக்கேத் திரும்பினார் நிலா.

முன்ன மாதிரி கிடையாது சாமீ, நான் இப்போ ரொம்ப சமர்த்தாக்கும் என்று தயாரிப்பாளர்களுக்கு ஓலை விட அதை நம்பி லீ பட வாய்ப்பு வந்தது. இந்தப் படத்திலும் கூட சில சில்மிஷங்கைள செய்து பார்த்தார் நிலா. இருந்தாலும் தயாரிப்பாளர் சத்யராஜ் என்பதால் ரொம்ப லொள்ளு பண்ண முடியவில்லை.

இந்தப் படத்தை முடித்ததும் கில்லாடி பட வாய்ப்பு வந்தது. அப்படியே ஆபத்பாந்தவன் அர்ஜூன் நிலாவைப் பிடித்து தனது மருதமலையில் போட்டு நடிக்க வைத்து வருகிறார். கில்லாடி இன்னும் ஆரம்பிக்கவில்லை. மருதமலையில் மட்டுமே நடித்து வருகிறார்.

அர்ஜூன் எப்போது மலையிலிருந்து நிலாவை இறக்கி விடுவார் என்று தெரியவில்லை.

இப்போது மருதமலை, கில்லாடி ஆகிய இரு படங்களைத் தவிர நிலாவிடம் புதிதாக ஒரு படமும் இல்லை. புதுப் பட வாய்ப்புகளும் வருவது போலத் தெரியவில்லை.

இதனால் விரக்தியாகி விட்ட நிலா, தானே புதிதாக ஒரு ஆல்பத்தைத் தயாரித்துள்ளார். அதில் ஜிலுஜிலுவென ஜொலிக்கும் போஸ்களைக் கொடுத்துள்ளாராம் நிலா.

இந்த ஆல்பத்தை பி.ஆர்.ஓ மூலமாக உலா விட்டுள்ள நிலா, தானும் தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு தயாரிப்பாளருக்கும் போன் போட்டு, நடந்ததை மறந்துடுங்க, இனிமே நல்ல பிள்ளையா இருப்பேன், சொன்னதைக் கேட்பேன் என்று கூறி வாய்ப்பு தேடுகிறாராம்.

மேலும், கிளாமர் குறித்துக் கவலையே படாதீங்க, சம்பளம் குறித்தும் ரொம்ப சங்கடப்படுத்த மாட்டேன் என்றும் பின் குறிப்பாக சொல்லி வைத்து வருகிறாராம்.

பெளர்ணமி வந்தால் பின்னாடியே அமாவாசையும் வரத்தானே செய்யும்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil