»   »  மீண்டும் ஒளிரும் நிலா!

மீண்டும் ஒளிரும் நிலா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அமாவாசைக் காலம் முடிந்து நிலா மீண்டும் பிரகாசமடைய ஆரம்பித்துள்ளார்.

அன்பே ஆருயிரே மூலம் கோலிவுட்டுக்கு வந்த ஒய்யாரப் பெண் நிலா. சிம்ரனின் ஜெராக்ஸ் என எஸ்.ஜே.சூர்யாவால் அறிமுகப்படுத்தப்பட்ட நிலா, சிம்ரனின் இடை நிழலுக்கு பக்கத்தில் கூட வர முடியாமல், எடுபடாமல் போனார்.

தேவையில்லாத சில பந்தாக்கள், அலம்பல்களால் நிலாவை தூக்கி தூர வைத்து விட்டது கோலிவுட். காலம் போன பின்னர் நிலையை உணர்ந்து, நிஜத்தைப் புரிந்து கொண்டு சமர்த்துப் பெண்ணாக மாற ஆரம்பித்துள்ளார் நிலா.

முன்பு போல நிலா இப்போது இல்லை. இடையில் யாரும் இல்லாமம் நேரடியாக தயாரிப்பாளர்களுடனும், இயக்குநர்களுடனும் தானாகவே போய் பேசி நல்ல நட்பை ஏற்படுத்திக் கொள்கிறார், டீல் பேசுகிறார்.

நிலாவின் இந்த மாற்றம் அவருக்கு திருப்திகரமான அளவுக்கு படங்களைப் பெற்றுத் தந்திருக்கிறது. கையில் 3 படங்களுடன் முகம் நிறைய மகிழ்ச்சியுடன் நடித்துக் கொண்டிருக்கிறார் நிலா. கில்லாடி படத்தில் பரத்துடன் தீவிரமாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

அத்தோடு நில்லாமல் தீவிரமாக தமிழும் கற்க ஆரம்பித்துள்ளார். என்னாச்சு நிலா, இப்படி மாறிட்டீங்க என்று பதறிப் போய் கேட்டபோது, ஒரு படம் வெற்றி பெற கதை ரொம்ப முக்கியம். ஒரு நடிகை திரையுலகில் வெற்றி பெற அந்த மொழியை நன்கு புரிந்து, உணர்ந்து நடிக்க வேண்டும். அதனால்தான் நான் தமிழ் கற்க ஆரம்பித்துள்ளேன் என்றார் புன்னகையுடன்.

நிலாவிடம் காதல், கல்யாணம் குறித்துப் பேச்செடுத்தால், மூச், 2011 வரைக்கும் நடிப்பு மட்டும்தான். நோ காதல். எங்க அப்பா, அம்மாவுக்கு காதல்னாலே பிடிக்காது. கல்யாணத்துக்கு முன்னாடி காதல் கிடையவே கிடையாது.

எனக்கு கல்யாணம் ஆகும்போது எல்லோருக்கும் சொல்வேன், எதற்காக கல்யாணத்தை மறைக்க வேண்டும். முடிந்தால் டிவியில் நேரடி ஒளிபரப்பு செய்யவும் முயற்சிப்பேன் என்கிறார் நக்கலாக.

குறும்புக்காரி!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil