»   »  நிலாவின் 'மழை'

நிலாவின் 'மழை'

Posted By:
Subscribe to Oneindia Tamil
Nila with Arjun in Marudhamalai
மருதமலையின் வெற்றியால் சந்தோஷமாக இருந்து வரும் நிலா அதே வேகத்தில் தெலுங்கில் புத்தம் புதுப் படத்தில் நடித்து வருகிறார்.

எங்கேயோ போயிருக்க வேண்டிய நிலா, எங்கேயும் வாய்ப்பு கிடைக்காமல் தொய்ந்து போனார், துவண்டு போனார். அன்பே ஆருயிரே படத்திற்குப் பிறகு ஒரு படமும் நிலாவின் பெயரைச் சொல்லவில்லை. மாறாக அவர் செய்த கால்ஷீட் சொதப்பல்தான் கொடி கட்டிப் பறந்தது.

இந்த நிலையில் லேட்டஸ்டாக வந்த மருதமலை சூப்பர் ஹிட் ஆனதால், நிலாவுக்கும் கொஞ்சம் சந்தோஷம். அதன் பின்னர் அவருக்குத் தமிழில் நிறையப் படங்கள் வரவில்லை என்றாலும் கூட தெலுங்கில் நிறையப் பட வாய்ப்புகள் வந்துள்ளனவாம்.

தற்போது எம்.எஸ்.ராஜுவின் இயக்கத்தில் உருவாகும் வானா (அதாவது மழை) என்ற படத்தில் நிலா நடித்து வருகிறாராம். இதில் அவருக்கு ஜோடி உன்னாலே உன்னாலே படத்தின் நாயகன் வினய்.

தமிழில் தற்போது பரத்துடன் நடித்து வந்த கில்லாடியும், தெலுங்கில் சத்யம் சிவம் சுந்தரம் படத்திலும் நடித்துள்ளார் நிலா. இரு படங்களும் முடங்கிக் கிடக்கின்றனவாம். இதனால் கொஞ்சம் போல விசனத்திலும் இருக்கிறார் நிலா.

இந்த இரண்டு படங்களையும் நிலா ரொம்பவே எதிர்பார்க்கிறாராம். இவை இரண்டும் வந்தால் நிச்சயம் நான் இரு மொழிகளிலும் சூப்பர் ஹிட் நாயகியாகி விடுவேன் என்று நம்பிக்கையோடு கூறுகிறார் நிலா.

தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்கள் ரொம்ப நல்லவர்கள், ரசனையானவர்கள் எனப் புகழும் நிலா, இந்திப் படத்தில் நடிக்கும் எண்ணமே இல்லை என்றும் கூறுகிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil