»   »  நல்ல காரியம் செஞ்சீங்க: தலைமுடியை வெட்டிய நிஷா கணேஷை வாழ்த்தும் ரசிகர்கள்

நல்ல காரியம் செஞ்சீங்க: தலைமுடியை வெட்டிய நிஷா கணேஷை வாழ்த்தும் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நல்ல காரியத்திற்காக நடிகை நிஷா கணேஷ் தனது தலைமுடியை வெட்டியுள்ளார்.

நடிகர் கணேஷ் வெங்கட்ராமின் மனைவியான நிஷா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் இருந்து வெளியேறியுள்ளார்.

தன்னை முழு நேர வில்லியாக்கியதால் அவர் சீரியலில் இருந்து விலகிவிட்டார்.

நிஷா

புற்றுநோயாளிகளுக்கு விக் செய்ய தனது தலைமுடியை தானமாக கொடுத்துள்ளார் நிஷா. இதை அவர் புகைப்படத்துடன் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

பாராட்டு

நல்ல விஷயம் செய்தீர்கள் அக்கா. சூப்பர் என்று ரசிகர்கள் பலரும் நிஷாவை பாராட்டியுள்ளனர். சிலரோ நல்ல காரியம் செய்ததை ஏன் ஊருக்கே தண்டோரா போடுகிறீர்கள் என்று கேட்டுள்ளனர்.

தானம்

பலரும் தலைமுடியை தானம் செய்ய முன் வர வேண்டும் என்று விரும்புகிறேன். அதனால் தான் நான் தானம் செய்ததை சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளேன் என்கிறார் நிஷா.

மொட்டை

நீங்கள் ஒரு நடிகையாக இருப்பதால் மொட்டை அடித்திருந்தால் பலருக்கும் அந்த தகவல் சென்றடைந்திருக்கும் என்று ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

English summary
Nisha Ganesh has tweeted that, 'Chopped my hair for a good cause! Donated my hair for cancer patients :)'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X