»   »  நான் திமிர் பிடிச்சவ, நீ பார்த்த...? கோபத்தில் நித்யா மேனன்

நான் திமிர் பிடிச்சவ, நீ பார்த்த...? கோபத்தில் நித்யா மேனன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நான் என்னை தேடி வரும் அனைத்து பட வாய்ப்புகளையும் ஏற்பது இல்லை. அதனால் என்னை திமிர் பிடித்தவள், தலைக்கனம் பிடித்தவள் என்கிறார்கள் என்று நடிகை நித்யா மேனன் தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் நடித்து வருகிறார் நித்யா மேனன். தற்போது அவர் டோலிவுட்டில் மிகவும் பிசியாக உள்ளார். நித்யா மேனன் ஒரு திமிர் பிடித்த நடிகை என்ற பேச்சு உள்ளது.

இது குறித்து நித்யா கூறுகையில்,

நடிகை

நடிகை

நான் நடிகையாவேன் என்று கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை. சிறு வயதில் இருந்தே எங்கு அநியாயம் நடந்தாலும் எனக்கு கோபம் வரும். அநியாயங்களை மக்களின் பார்வைக்கு கொண்டு செல்ல பத்திரிகையாளர் ஆக வேண்டும் என ஆசைப்பட்டேன். ஆனால் விதி என்னை நடிகையாக ஆக்கிவிட்டது.

திமிர்

திமிர்

நித்யா மேனன் ஒரு திமிர் பிடித்தவர், அகம்பாவம், தலைக்கனம் உள்ளவர் என்று பலர் என் பின்னால் பேசுவது எனக்கு தெரியாமல் இல்லை. சினிமாவில் நடித்து தான் வாழ வேண்டும் என்று இல்லை.

கதை

கதை

என்னை தேடி வரும் வாய்ப்புகளில் நல்ல கதையம்சம் கொண்டவைகளை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறேன். அதை வைத்து தான் எனக்கு தலைக்கனம் என்கிறார்கள். அவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை.

பாடகி

பாடகி

நான் சிறு வயதில் இருந்தே விழாக்களில் பாடி உள்ளேன். படங்களிலும் பாட வாய்ப்பு வருகிறது. நடிகை, பாடகி ஆகிய இரண்டில் எனக்கு பாடகியாக இருக்கவே மிகவும் விருப்பம் என்கிறார் நித்யா.

English summary
Nithya Menen said that she doesn't care about people saying that she has head weight.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil