»   »  அதுக்கு நான் சும்மாவே இருந்துட்டு போறேன்! – நித்யாமேனன் ஆதங்கம்

அதுக்கு நான் சும்மாவே இருந்துட்டு போறேன்! – நித்யாமேனன் ஆதங்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

2006 ல் அறிமுகமாகிய நித்யா மேனன் தமிழில் நல்ல நடிகை என பெயரெடுக்க 9 வருடங்கள் ஆனது. சென்ற ஆண்டு வெளியான மணிரத்னத்தின் ஓகே கண்மணியில் சிறப்பாக நடித்ததற்காக பாராட்டுகள் பெற்றார்.

சமீபத்தில் வெளியான முடிஞ்சா இவனை புடி படத்தில் சுதீப்புக்கு ஜோடியாக நடித்திருந்தார். தனி ஹீரோயினாக நடிக்கத்தான் நித்யா மேனன் விருப்பப்படுகிறார். ஆனால் நித்யாமேனனை தொடர்ந்து இரண்டாம் கதாநாயகியாகவே மாற்றி வருகிறது சினிமா.

Nithya Menon's new decision

தமிழில் காஞ்சனா 2, 24 படங்களில் இரண்டாவது ஹீரோயினாக நடித்தவர், இரண்டிலுமே ஏகப்பட்ட கசப்பான அனுபவங்கள். இரண்டு படங்களிலுமே புரமோஷன்களில் நித்யாமேனனுக்கு முக்கியத்துவம் தரவே இல்லை. இப்போது கூட நித்யாமேனன் நடித்துவரும் இருமுகன் படத்தின் விளம்பரங்களில் நயன்
தாராவுக்கு தான் அதிக முக்கியத்த்வம் தரப்படுகிறது.

இங்குதான் இப்படி நடக்கிறதே என்று தெலுங்குக்கு போனால் அங்கேயும் இதே நிலை தொடர்கிறதாம். ஜுனியர் என்டிஆர், சமந்தா நடித்திருக்கும் ஜனதா கேரேஜ் படத்திலும் நடித்திருக்கிறார் நித்யாமேன்ன். அடுத்த வாரம் படம் ரிலீஸாகவிருக்கும் நிலையில் புரமோஷன்களில் நித்யாமேனன் படத்தையே
பயன்படுத்தவில்லை படக்குழு.

இதனால் விரக்தியின் உச்சத்தில் இருக்கும் நித்யாமேனன் 'இனி சும்மா இருந்தாலும் சும்மா இருப்பேன். இன்னொரு ஹீரோயின் இருக்கற படத்துல நடிக்க மாட்டேன்' என்று ஆதங்கப்பட்டிருக்கிறார்.

English summary
Actress Nithya Menon has decided not to act in double heroine stories.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil