»   »  தெலுங்கில் மீண்டும் இணையும் தோழிகள் சமந்தா, நித்யாமேனன்!

தெலுங்கில் மீண்டும் இணையும் தோழிகள் சமந்தா, நித்யாமேனன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகைகள் சமந்தாவும், நித்யா மேனனும் இணைந்து தெலுங்கில் ஒரு படத்தில் ஒன்றாக இணைந்து நடிக்கவிருக்கிறார்கள். தெலுங்கில் 2 படங்களில் இணைந்து நடித்த இவர்கள் நெருங்கிய தோழிகளாகிவிட்டனர். தான் நடிக்கும் படங்களில் கூடுதல் ஹீரோயின் தேவைப்பட்டால் நித்யா மேனனைத்தான் சிபாரிசு செய்கிறாராம் சமந்தா.

தமிழில் இரு ஹீரோக்கள் ஒன்றாக இணைந்து நடிப்பதுதான் அரிது. ஆனால், தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் இரண்டு ஹீரோயின்கள் இணைந்து ஒரு படத்தில் நடிப்பது வாடிக்கையாகிவிட்டது. இப்படி இணைந்த நடித்த இரண்டு ஹீரோயின்கள் எளிதில் நட்பாகிவிடுவார்கள்.

தமிழில் சூர்யா நடித்த '24' படத்தில் சமந்தாவுடன், நித்யா மேனன் நடித்துள்ளார். அதுபோல விக்ரம் நடிக்கும் 'இருமுகன்' படத்திலும் நயன்தாராவுடன் இணைந்து நித்யா மேனன் நடித்து வருகிறார். தமிழில் தனுஷ் நடித்த 'தங்கமகன்' படத்தில் ஏமி ஜாக்சனுடன் நடித்த சமந்தா நடித்தார். அடுத்து விஜய்யின் 'தெறி' படத்திலும் ஏமி ஜாக்சனுடன் சமந்தா நடித்துள்ளார்.

சமந்தாவின் தோழிகள்

சமந்தாவின் தோழிகள்

ஹீரோயின்களுக்கு இடையே திரைக்கு முன் நட்பாக இருந்தாலும் தொழில் என்று வந்துவிட்டால் போட்டியும், பொறாமையும் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. நடிகை சமந்தா, மற்ற நடிகைகளுடன் நட்பு பாராட்டுபவர். நடிகை த்ரிஷாவிற்கும் நடிகை சமந்தாவிற்கும் நெருங்கிய நட்பு உண்டென டோலிவூட் வட்டாரத்தில் கூறப்படும் நிலையில் நடிகை நித்யா மேனனும் தற்பொழுது நடிகை சமந்தாவின் தோழிகள் பட்டியலில் சேர்ந்துள்ளார்.

இரண்டு ஹீரோயின்கள்

இரண்டு ஹீரோயின்கள்

முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் சமந்தா. தனது படங்களில் 2வது ஹீரோயின் வேடம் வந்தால் அதை பிரணிதாவுக்கு சிபாரிசு செய்து வந்தார்.

நித்யாமேனன்

நித்யாமேனன்

சமந்தாவுடன் சன் ஆப் சத்யமூர்த்தி என்ற தெலுங்கு படத்தில் இணைந்து நடித்தார் நித்யா மேனன். அப்போதுமுதல் இவர்கள் இருவரும் நெருங்கிய தோழிகள் ஆகிவிட்டனராம்.

பர்சனல் பக்கங்கள்

பர்சனல் பக்கங்கள்

இதனால் இரண்டு நாயகிகள் படங்கள் என்றால் பிரணிதாவுக்கு செய்து வந்த சிபாரிசை நித்யா மேனனுக்கு செய்யத் தொடங்கினார் சமந்தா. தங்களின் பர்சனல் விஷயங்களையும் இருவரும் மனம் விட்டு பகிர்ந்துகொள்கின்றனராம்.

சமந்தாவின் தோழி

சமந்தாவின் தோழி

சமீபத்தில் சமந்தாவிடம், ‘உங்களை தவிர திரையுலகில் அதிக எனர்ஜி, திறமை, சாதுர்யமான நடிகையென்றால் யாரை சொல்வீர்கள்' என கேட்டபோது சற்றும் யோசிக்காமல் நித்யா மேனன் பெயரை கூறினார்.

தெலுங்கில் இணைந்த தோழிகள்

தெலுங்கில் இணைந்த தோழிகள்

தமிழில் தற்போது சூர்யாவின் 24 படத்தில் சமந்தாவும் நித்யா மேனனும் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த படத்தைத் தொடர்ந்து தற்போது நடிகை சமந்தாவும், நடிகை நித்யா மேனனும் மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். படத்தின் பெயர் 'ஜனதா சுரேஜ்'. படத்தின் நாயகன் ஜுனியர் என்.டி.ஆர். மற்றும் படத்தை கொரட்டல சிவா இயக்குகிறார்.

English summary
Actress Nithya Menon will be working with Samantha again if everything goes well. Both are slated to play the female leads opposite Jr NTR in the film Janata Garage which will be directed by Koratala Siva.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil