»   »  கல்லூரியில் ‘காதல் கண்மணியாக’ வலம் வந்த நித்யாமேனன்

கல்லூரியில் ‘காதல் கண்மணியாக’ வலம் வந்த நித்யாமேனன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது ஒரு இளைஞரைக் காதலித்ததாகவும், அந்தக் காதல் அப்போதே முடிந்து விட்டதாகவும் கூறியுள்ளார் நடிகை நித்யாமேனன்.

வெப்பம், ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை, ஓ காதல் கண்மணி, காஞ்சனா 2 ஆகிய படங்களில் நடித்திருப்பவர் நித்யா மேனன். கேரளாவைச் சேர்ந்த இவர் தனது திறமையான நடிப்பால் தமிழிலும் முன்னணி நடிகைகளுள் ஒருவராக உள்ளார்.

சவாலான கதை மற்றும் தனது கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடிப்பதால் சில படங்களில் மட்டுமே நடித்துள்ள போதும், திறமையான நடிகை என்ற பெயரைப் பெற்றுள்ளார்.

நிஜக்காதல்...

நிஜக்காதல்...

மணிரத்னத்தின் ஓகே கண்மணி படத்தில் காதலில் கசிந்துருகும் பெண்ணாக நடித்திருந்த நித்யாமேனனின் நிஜவாழ்க்கையிலும் அப்படி ஒரு காதல் இருந்ததாம். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது இளைஞர் ஒருவரைக் காதலித்தாராம் நித்யாமேனன்.

அது பழைய கதை...

அது பழைய கதை...

ஆனால், அந்தக் காதல் அப்போதே முடிந்து விட்டதாம். நடிக்க வந்த பிறகு அவர் யாரையும் காதலிக்கவில்லையாம்.

நம்பிக்கை...

நம்பிக்கை...

அதே சமயம் இனிமேல் காதல் வருமா, வராதா? என்பது குறித்தும் உறுதியாக கூற இயலாது எனத் தெரிவித்துள்ளார் நித்யாமேனன். எது நடக்க வேண்டுமோ, அது நடந்தே தீரும் என்பது தான் நித்யாமேனனின் நம்பிக்கையாம்.

புதிய படங்கள்...

புதிய படங்கள்...

நித்யாமேனன் நடிப்பில் ருத்ரமாதேவி மற்றும் அப்பாவின் மீசை ஆகிய படங்கள் வெளியாக உள்ளது. இது தவிர மலையாளப் படம் ஒன்றில் இரண்டு குழந்தைகளின் தாயாக நடிக்க நித்யாமேனன் சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

English summary
Actress Nithya Menon carved a niche for herself as one of the finest actresses of the present generation. While speaking to a leading daily, she said that she fell in love when she was 18.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil