»   »  "கமல் மகள்" நிவேதா தாமஸை கொண்டாடும் தெலுங்கு ரசிகர்கள்

"கமல் மகள்" நிவேதா தாமஸை கொண்டாடும் தெலுங்கு ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையிலிருந்து தெலுங்குத் திரையுலகிற்குச் செல்லும் நடிகைகளுக்கு அங்கு தனி ராசி இருக்கத்தான் செய்கிறது. சமந்தாவை தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். தற்போது 'ஜென்டில்மேன்' படத்தின் மூலம் தற்போது புதிதாக முத்திரை பதித்துள்ளவர் நிவேதா தாமஸ்.

Nivetha Thomas rocks Telugu cinema

கமல்ஹாசன், கௌதமியின் மகளாக 'பாபநாசம்' படத்திலும், 'ஜில்லா' படத்தில் விஜய்யின் தங்கையாகவும், ஜெய்யுடன் 'நவீன சரஸ்வதி சபதம்', சசிகுமார், நரேஷுடன் 'போராளி' ஆகிய படங்களிலும் நடித்தார் நிவேதா தாமஸ்.

Nivetha Thomas rocks Telugu cinema

மலையாளப் படங்களிலும் நடித்துள்ள நிவேதா, நானி கதாநாயகனாக நடித்துள்ள 'ஜென்டில்மேன்' படம் மூலம் தெலுங்குத் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.

Nivetha Thomas rocks Telugu cinema

சுரபி ஒரு நாயகியாகவும், நிவேதா மற்றொரு நாயகியாகவும் நடித்துள்ள ஜென்டில்மேன் படத்தில் நிவேதாவின் நடிப்பைப் பார்த்து தெலுங்குத் திரையுலகினர் ஆச்சரியப்பட்டுள்ளதாக அக்கட தேசத்தில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

English summary
Papanasam fame Nivetha Thomas is all set to rock Telugu cinema through her movie with Nani.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil