»   »  இந்த நடிகைக்கு 'அந்த' ஹீரோவுடன் நடிக்க வாய்ப்பா?: ஷாக்கில் ஹீரோயின்கள்

இந்த நடிகைக்கு 'அந்த' ஹீரோவுடன் நடிக்க வாய்ப்பா?: ஷாக்கில் ஹீரோயின்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஜூனியர் என்.டி.ஆர். படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் நிவேதா தாமஸ்.

கேரளாவை சேர்ந்தவர் நிவேதா தாமஸ். விஜய்யின் குருவி படம் மூலம் கோலிவுட் வந்தார். விஜய் தங்கையாக ஜில்லா படத்திலும், கமல் ஹாஸனுக்கு மகளாக பாபநாசம் படத்திலும் நடித்துள்ளார்.

போராளி, நவீன சரஸ்வதி சபதம் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

தெலுங்கு

தெலுங்கு

நானியின் ஜென்டில்மேன் படம் மூலம் தெலுங்கு திரையுலகிலும் கடந்த ஆண்டு அடியெடுத்து வைத்தார். டோலிவுட்டுக்கு சென்ற வேகத்தில் அவருக்கு பெரிய வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது.

ஜூனியர் என்.டி.ஆர்.

ஜூனியர் என்.டி.ஆர்.

தெலுங்கு திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான ஜூனியர் என்.டி.ஆரின் புதுப் படத்தில் இரண்டு ஹீரோயின்கள். அதில் ஒருவர் ராசி கன்னா மற்றொருவர் நிவேதா தாமஸ். படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க உள்ளது.

நிவேதா

நிவேதா

ஜூனியர் என்.டி.ஆர். படங்களில் பெரும்பாலும் இரண்டு ஹீரோயின்கள் இருப்பார்கள். அவரின் புதுப்படத்தின் கதை பிடித்ததால் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம் நிவேதா. அவர் ஜூன் அல்லது ஜூலை மாதம் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். இந்நிலையில் மீண்டும் நானிக்கு ஜோடியாக நடித்து வருகிறார் நிவேதா.

அடேங்கப்பா

அடேங்கப்பா

ஜூனியர் என்.டி.ஆர். படத்தில் நடிக்க முன்னணி ஹீரோயின்கள் எல்லாம் லைன் கட்டி நிற்க நிவேதாவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை பார்த்து முன்னணி ஹீரோயின்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

English summary
Nivetha Thomas is set to act in Junior NTR's upcoming movie that is going on floors next month. Currently she is acting with Nani in an untitled telugu movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil