மாட்டுக் கொட்டகையில் பால்கறக்கும் ரஜினியின் ரீல் மகள்!

சென்னை : இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் ரஜினிகாந்த் கூட்டணியில் வெளியான தர்பார் திரைப்படத்தில் ரஜினிக்கு மகளாக நடித்தவர் நடிகை நிவேதா தாமஸ்.

திரைப்படங்களில் அறிமுகம் ஆவதற்கு முன்பாகவே பல தொலைக்காட்சி தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமாக இருந்தவர்.

தமிழ்,தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் படு பிசியாக நடித்து வரும் நிவேதா தாமஸ் இப்பொழுது மாட்டுக் கொட்டகையில் பால் கறக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

ரஜினிகாந்தின் மகளாக

ரஜினிகாந்தின் மகளாக

கஜினி,துப்பாக்கி,கத்தி, சர்கார், ஸ்பைடர் என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் முதன் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் கூட்டணி அமைத்த தர்பார் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அதில் ரஜினிகாந்தின் மகளாக நடிகை நிவேதா தாமஸ் பிரமாதமாக நடித்து ரசிகர்களிடம் பாராட்டுக்களைப் பெற்றிருந்தார்.

தங்கை வேடங்களில்

தங்கை வேடங்களில்

பல பிரபலமான தொலைக்காட்சி தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த நிவேதா தாமஸ் விஜய்யின் குருவி படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து வெள்ளித்திரையிலும் வலம் வர ஆரம்பித்தார். மீண்டும் விஜய்க்கு தங்கையாக ஜில்லா படத்திலும் நடித்திருந்தார் . அதன் பிறகு ஜெய்க்கு ஜோடியாக நவீன சரஸ்வதி சபதம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான பிறகும் தொடர்ந்தும் தங்கை மற்றும் மகள் வேடங்களில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

Recommended Video

'V' ஒரு RARE SCRIPT | ACTOR SUDHEER BABU EXCLUSIVE | FILMIBEAT TAMIL
லக்கி ஜோடி

லக்கி ஜோடி

தமிழ்,மலையாளத்தை விடவும் தெலுங்கில் இவருக்கு வாய்ப்புகள் அதிக அளவு குவிந்து வருகிறது. அந்த வகையில் நானிக்கு ஜோடியாக ஜென்டில்மேன் மூலம் தெலுங்கு திரைப்படத் துறையில் காலடி பதித்த நிவேதா தாமஸ் அதைத்தொடர்ந்து நின்னுக்கோரி மற்றும் வி உள்ளிட்ட படங்களிலும் நானிக்கு ஜோடியாக நடித்திருந்தார். நானியுடன் இணைந்து நடித்த 3 திரைப்படங்களும் சூப்பர்ஹிட் வெற்றிபெற இந்த லக்கி ஜோடி மீண்டும் நான்காவது முறையாக புதிய திரைப்படத்தில் இணைய உள்ளனர்.

ஃபிரஷ்ஷாக பால் கரைந்து

ஃபிரஷ்ஷாக பால் கரைந்து

இந்தி மற்றும் தமிழைத் தொடர்ந்து பிங்க் திரைப்படம் தெலுங்கில் "வக்கீல் சாப்" என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.அதில் பவன் கல்யாண் லிட் ரோலில் நடித்திருக்க பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவராக நிவேதா தாமஸ் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இப்பொழுது மீட் க்யூட் மற்றும் ஷாகினி தாகினி உள்ளிட்ட தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்தநிலையில் மாட்டுக் கொட்டகையில் பசுவிடமிருந்து ஃபிரஷ்ஷாக தானே பால் கரைந்து அதில் டீ போட்டுக் குடித்த உற்சாகத்தில் அந்த வீடியோவை இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்க அது வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X