»   »  'பரீட்சைக்கு படிக்கணும்..' - நடிப்புக்கு பிரேக் விட்ட நடிகை!

'பரீட்சைக்கு படிக்கணும்..' - நடிப்புக்கு பிரேக் விட்ட நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil
ரசிகர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்த நிவேதா தாமஸ் .

சென்னை: கேரளாவைச் சேர்ந்த நடிகை நிவேதா தாமஸ், குழந்தை நட்சத்திரமாக பல மலையாளப் படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் வெளியான 'மை டியர் பூதம்' சீரியலில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு அறிமுகமானவர்.

வளர்ந்ததும் ஹீரோயினாக அறிமுகமான நிவேதா தாமஸ் தற்போது கல்லூரியில் படித்துக்கொண்டே நடித்து வருகிறார். சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடித்த 'போராளி' படம்தான் தமிழில் அவருக்கு முதல் படம்.

Nivetha thomas takes short break from cinema

கமல், கௌதமி நடிப்பில் வெளிவந்த 'பாபநாசம்' படத்தில் கமலின் மூத்த மகளாக முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். தற்போது தெலுங்குப் படங்களில் கவனம் செலுத்திவரும் நிவேதா, கடைசியாக ஜூனியர் என்.டி.ஆருடன் இணைந்து 'ஜெய் லவ குசா' படத்தில் நடித்தார்.

இந்நிலையில், கல்லூரி பரீட்சை வருவதால், படிப்பதற்காக நடிப்புக்கு சில மாதங்கள் பிரேக் விட்டுள்ளார் நிவேதா தாமஸ். இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நிவேதா தாமஸ்.

"எனது அடுத்த பட அறிவிப்பு குறித்து எல்லா ரசிகர்களும் கேட்கின்றனர். 'ஜெய் லவ குசா' படத்துக்குப் பிறகு என்னுடைய கடைசி செமஸ்டரை எழுதுவதற்காக பிரேக் விட்டுள்ளேன். அதேசமயம், ஒன்லைன் கேட்டும், கதைகளைப் படித்தும் வருகிறேன். விரைவில் அடுத்த பட அறிவிப்பு வரும்" என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் நிவேதா தாமஸ்.

English summary
Actress Nivetha Thomas is acting in Tamil, Telugu and Malayalam films. In this case, Nivetha Thomas takes break for a few months for acting due to college semester exams.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X