»   »  நயன்தாராவுக்காக வெயிட் குறைக்கும் நிவின் பாலி!

நயன்தாராவுக்காக வெயிட் குறைக்கும் நிவின் பாலி!

Posted By:
Subscribe to Oneindia Tamil
வெயிட் குறைக்கும் நிவின், நயன்- வீடியோ

கொச்சின் : நிவின் பாலி தற்போது ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் 'காயங்குளம் கொச்சுண்ணி' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்திற்காக தனது உடல் எடையை சற்றே கூட்டியிருக்கிறார் நிவின்பாலி.

அடுத்ததாக தான் நடிக்க இருக்கும் 'லவ் ஆக்‌ஷன் ட்ராமா' படத்திற்காக சுமார் பத்து கிலோ வரை உடல் எடையை குறைக்க இருக்கிறாராம் நிவின் பாலி. இந்தப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார்.

Nivin pauly reduce weight for nayanthara movie

மலையாள இளம் முன்னணி இயக்குனர் வினீத் சீனிவாசனின் தம்பி தயன் சீனிவாசன் தான் இந்தப் படத்தை இயக்க இருக்கிறார். இந்தப்படத்திற்கு கதை எழுதியிருக்கிறார் அண்ணன் வினீத் சீனிவாசன்.

நிவின் பாலி - தயன் சீனிவாசன் - வினீத் சீனிவாசன் கூட்டணியில் எப்போதுமே முக்கியமான ஆளாக கருதப்படும் அஜூ வர்கீஸ் இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதுடன் இந்தப்படத்தையும் தயாரிக்கிறார்.

'லவ் ஆக்‌ஷன் ட்ராமா' படத்திற்காக நிவின் பாலி எடை குறைத்துள்ள தகவல் ரசிகர்களை குஷிப் படுத்தியுள்ளது. நயன்தாராவை மீண்டும் மலையாள திரையுலகில் பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆவலோடு இருக்கிறார்கள்.

English summary
Nivin Pauly is currently starring in 'Kayankulam Kochunni'. Nivin pauly reduce the body weight by about ten kilos for next film 'Love Action Drama'. Nayantara plays as the heroine in this movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil