»   »  நானும் திரிஷாவும் சிஸ்டர்ஸ்... டுவிட்டரில் ஹன்சிகா உருக்கம்!

நானும் திரிஷாவும் சிஸ்டர்ஸ்... டுவிட்டரில் ஹன்சிகா உருக்கம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரே படத்தில் இணைந்து நடித்தாலும், தனக்கும் திரிஷாவுக்கும் இடையே சண்டை ஏதுமில்லை, இருவரும் சகோதரிகளாக பழகுகிறோம் எனத் தெரிவித்துள்ளார் நடிகை ஹன்சிகா.

ஒரு படத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நடிகைகள் நடிக்கிறார்கள் என்றால், அதில் யாருக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது என்பதில் நிச்சயமாக பிரச்சினை இருக்கும். அதிலும், இருவருமே முன்னணி நடிகைகள் என்றால் சொல்லவே வேண்டாம்.

ஆனால், இதிலிருந்து மாறுபட்டு இருக்கிறார்கள் திரிஷாவும், ஹன்சிகாவும்.

அரண்மனை 2...

அரண்மனை 2...

தற்போது ஹன்சிகாவும், திரிஷாவும் சுந்தர்.சி இயக்கும் அரண்மனை -2ம் பாகத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதல் பாகத்தில் பேயாக வந்து மிரட்டியிருந்தார் ஹன்சிகா.

திரிஷா...

திரிஷா...

முதல் பாகத்தில் ஹன்சிகாவுடன் ஆண்ட்ரியா, ராய் லட்சுமி ஆகியோர் நடித்திருந்தனர். தற்போது இரண்டாம் பாகத்தில் ஹன்சிகாவுடன் திரிஷா இணைந்துள்ளார்.

ஹன்சிகாவுக்கு முக்கியத்துவம்...

ஹன்சிகாவுக்கு முக்கியத்துவம்...

முதல்படம் போலவே, இரண்டாம் பாகத்திலும் ஹன்சிகாவுக்குத் தான் அதிக முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம் எனக் கூறப்படுகிறது. தனால், திரிஷாவுக்கு ஹன்சிகா மீது சற்று வருத்தம் என செய்திகள் பரவியது.

நல்ல தோழிகள்...

ஆனால், இத்தகவலை ஹன்சிகா, திரிஷா இருவருமே மறுத்துள்ளனர். இது தொடர்பாக திரிஷா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், ‘நடிகைகளும் நல்ல தோழிகளாக இருக்க முடியும்' என ஹன்சிகா புகைப்படத்தோடு பதிவு செய்துள்ளார்.

சிஸ்டர்ஸ்...

இதனை ரீடுவிட் செய்துள்ள ஹன்சிகா, தனது டுவிட்டர் பக்கத்தில், ‘எங்களுக்குள் இறுக்கமான சூழல் இல்லை. நாங்கள் இருவரும் சகோதரிகள்' என திரிஷா குறித்து தெரிவித்துள்ளார்.

சித்தார்த்...

சித்தார்த்...

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அரண்மனை - 2ன் படப்பிடிப்பு தொடங்கியது. இப்படத்தில் சித்தார்த் ஹீரோவாக நடிக்கிறார்.

ஹிப் ஹாப் தமிழா...

ஹிப் ஹாப் தமிழா...

மேலும், முந்தைய படத்தைப் போலவே இதிலும் கொவை சரளா, மனோபாலா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

English summary
Actress Hansika Motwani has for the fourth time collaborated with actor-filmmaker Sundar C for upcoming Tamil horror-comedy 'Aranmanai 2'. 'Aranmanai 2'' already features Trisha Krishnan and Siddharth 'No catfights here... Just sister -romance' Hansika tweeted.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil