»   »  கவுதமியோடு எந்த கருத்து வேறுபாடும் இல்லை! - ஸ்ருதிஹாஸன்

கவுதமியோடு எந்த கருத்து வேறுபாடும் இல்லை! - ஸ்ருதிஹாஸன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கவுதமிக்கும் எனக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. நல்ல புரிதலோடு நாங்கள் ஒரு குடும்பமாக வாழ்கிறோம் என்று கூறியுள்ளார் நடிகை ஸ்ருதிஹாஸன்.

நடிகை கவுதமி, அவரது மகள், கமல் ஹாஸன் அவரது மகள்கள் அனைவருமே ஒரே வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். கவுதமிக்கும் ஸ்ருதிஹாஸனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கடந்த இரு தினங்களாக செய்திகள் வருகின்றன.

No difference of opinion with Gouthami - Shruthi Hassan

இதை மறுத்துள்ள ஸ்ருதிஹாஸன், தனது பிஆர்ஓ மூலம் அனுப்பியுள்ள ஒரு விளக்கம்:

நடிகர் கமல்ஹாசன் இயக்கி நடித்து வரும் 'சபாஷ் நாயுடு' படத்தில் அவருடைய மகள் ஸ்ருதி ஹாசன் முக்கிய கதாபாத்திரத்திலும், கவுதமி ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்கள்.

இந்த படத்தில் கவுதமி ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றுவது ஸ்ருதிஹாசனுக்கு பிடிக்கவில்லை என்று கடந்த சில நாட்களாக ஆதாரமற்ற செய்திகளும், வதந்திகளும் பரவி வருகிறது. ஆனால் இவை அனைத்தும் வெறும் கட்டுக்கதைகள் என்று ஸ்ருதிஹாசன் சொல்லி இருக்கிறார்.

தனக்கென்று ஒரு தனி ஸ்டைல், தனக்கென்று ஒரு தனி டிசைன் என்று தனித்துவமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஸ்ருதிஹாசன், தன்னுடைய திரைப்படங்களிலும் அதையேதான் விரும்புகிறார். தனது ஆடை அலங்காரம் பற்றி இயக்குநரிடமும், தயாரிப்பாளரிடமும் அவர் கலந்து பேசுவது வழக்கம்.

'சபாஷ் நாயுடு' படத்தில் நாகரிக பெண்ணாகவும், துடுக்கான பெண்ணாகவும் அவர் நடிக்கிறார். அதைக் கருத்தில் கொண்டு அந்த கதாபாத்திரத்துக்கு ஏற்ப சில ஆடைகளை வடிவமைத்து கொடுத்து இருக்கிறார், கவுதமி. அந்த ஆடைக்கு சில யோசனைகளை ஸ்ருதிஹாசன் கூற-அதற்கு தகுந்தபடி கதாபாத்திரத்துக்கு கன கச்சிதமாக பொருந்தும் ஆடையை கவுதமி வடிவமைத்து கொடுத்து இருக்கிறார்.

இந்த ஆடையை ஸ்ருதியுடன் இணைந்து அவர் வடிவமைத்தது குறிப்பிடத்தக்கது. சினிமாவை தவிர்த்து நிஜ வாழ்க்கையிலும், ஸ்ருதி-கவுதமி இடையே நிலையான அன்பு இருந்து வருகிறது. ஸ்ருதியும், அவரது தந்தையும் அழகான உறவை தங்களுக்குள் பகிர்ந்து வருகிறார்கள். தங்களுடைய அழகான சிறிய குடும்பத்துக்குள் கவுதமியை அன்போடு வரவேற்று இருக்கிறார், ஸ்ருதி. ஸ்ருதியின் பிறந்த நாளிலும் கவுதமி பங்கேற்று தனது அன்பை வெளிப்படுத்தினார்.''

English summary
Shruthi Hassan has sent an explanation note that there is no difference of opinion with Gouthami.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil