»   »  20க்குள்ளதான இருக்கேன்.. அதுக்குள்ள என்ன அவசரம்... கேட்கிறார் தமன்னா!

20க்குள்ளதான இருக்கேன்.. அதுக்குள்ள என்ன அவசரம்... கேட்கிறார் தமன்னா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகைகளில் சிலர்தான் புகழோடு இருக்கும் போதே திருமணமாகி செட்டில் ஆகிவிடுகின்றனர். சில நடிகைகளோ நடித்து மார்க்கெட் அவுட் ஆனபின்னர் தொழிலதிபருக்கு கழுத்தை நீட்டுவார்கள்.

தமன்னா நடிக்க வந்து பத்து ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. திருமணத்திற்கு ரெடியாகிவிட்டீர்களா? என்று கேட்டால் அதற்குள் என்ன அவசரம் என்று கேட்கிறார்.

மேலும் தனக்கு திருமணத்திற்கான வயதாகவில்லை என்றும் கூறுகிறார் தமன்னா.

பாலிவுட் படத்தில்

பாலிவுட் படத்தில்

‘ஷன்ட் ஸா ரொஷான் செஹ்ரா' எனும் பாலிவுட் படத்தின் மூலம் 2005ஆம் ஆண்டில் சினிமாவில் அறிமுகமான தமன்னா தமிழில் கேடி படத்தில் 2006இல் அறிமுகமானார்.

தமிழில் பிஸி

தமிழில் பிஸி

படிக்காதவன், அயன், பையா, சிறுத்தை என வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்து தமன்னா சில காலம் தமிழ் சினிமாவில் ஒதுங்கியிருந்தார்.

வீரம் படம் மூலம்

வீரம் படம் மூலம்

இருப்பினும் தெலுங்கில் படு பிஸியாக நடித்துக்கொண்டிருந்தவர் அஜித்தின் வீரம் படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் தனது 2ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்தார். தற்போது தமிழில் தற்போது ஒரு படம் கைவசம் உள்ளது.

பாகுபலி

பாகுபலி

தெலுங்கில் தமன்னா நடித்த பாகுபலி படப்பிடிப்பு முடிந்துள்ளது. ‘பெங்கால் டைகர்' என்ற இன்னொரு படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

நீச்சல் உடையில்

நீச்சல் உடையில்

இத்தனையாண்டுகளாகியும் நீச்சல் உடையில் தமன்னா நடிக்கவேயில்லை. அதேபோல லிப் லாக் சீனிலும் நடித்ததில்லை. இதற்காக காரணத்தை தமன்னாவே சொல்கிறார்.

உதட்டோடு உதடு வைத்து

உதட்டோடு உதடு வைத்து

உதட்டோடு உதடு வைத்து முத்த காட்சியில் நடிக்க கூடாது. நீச்சல் உடையிலும் நடிக்க கூடாது என்று முடிவு செய்து இருந்தேன். இன்று வரை அதை கடைபிடித்து வருகிறேன் என்கிறார்.

நோ சமரசம்

நோ சமரசம்

நிறைய தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும் கதைக்கு முத்த காட்சி, நீச்சல் உடை தேவை என்றும் அதில் நடிக்க வேண்டும் என்றும் என்னிடம் வற்புறுத்தி உள்ளனர். அதனை நான் ஏற்கவில்லை. முத்தம், நீச்சல் உடையில் நடிப்பதற்கு ஒரு போதும் சமரசம் செய்து கொள்ள மாட்டேன்.

அது அவர்கள் விருப்பம்

அது அவர்கள் விருப்பம்

இதர கதாநாயகிகள் முத்த காட்சிகளிலும், நீச்சல் உடையிலும் நடிக்கிறார்களே என்று கேட்கலாம். அவர்களை பற்றி நான் எதுவும் சொல்ல மாட்டேன். அப்படி நடிப்பது அவர்களது விருப்பம். என்னை பொறுத்தவரை அது போன்ற காட்சிகளில் நடிப்பது தவறாக படுகிறது. எனவேதான் அப்படி நடிக்க கூடாது என்று இருக்கிறேன் என்று கூறியுள்ளார் தமன்னா.

அதுக்குள்ள என்ன அவசரம்

அதுக்குள்ள என்ன அவசரம்

த்ரிஷா சினிமாவுக்கு வந்து 10 வருஷங்கள் ஆச்சு. கல்யாணம் நிச்சயமாயிருச்சு. உங்களுக்கு எப்போ கல்யாணம்?' என்று கேட்டால் கன்னம் சிவக்க சிரிக்கும் தமன்னா நான் என் ட்வென்ட்டீஸ்லதான் இருக்கேன். அதுக்குள்ள கல்யாணத்துக்கு என்ன அவசரம்?என்கிறார்.

இன்னும் 3 வருஷம்

இன்னும் 3 வருஷம்

எனக்கு நல்லா தெரிஞ்சவரைத்தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன் என்று கூறும் தமன்னா, இன்னும் மூணு வருஷங்களாச்சும் ஆகும் நான் கல்யாணத்தைப் பத்தி யோசிக்க. அதனால இந்தக் கேள்விக்கு மூணு வருஷங்களுக்கு லீவு விடுங்கப்பா என்கிறார் தமன்னா.

English summary
Actress Tamannah is not hurry to enter into wed lock as she is still young.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil