»   »  சிம்பிளா திருமணம்... பிரமாண்டமா ரிசப்ஷன்... கோலிவுட்டைக் கண்டுக்குவாரா அசின்?

சிம்பிளா திருமணம்... பிரமாண்டமா ரிசப்ஷன்... கோலிவுட்டைக் கண்டுக்குவாரா அசின்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோலிவுட்டில் கொடிகட்டிப் பறந்துவிட்டு, பாலிவுட் போய் பெரிய சறுக்கலுக்குள்ளான அசினுக்கு, சொந்த வாழ்க்கையில் எந்த ஏமாற்றமும் இல்லை.

நல்ல புளியங்கொம்பாகவே கிடைத்துவிட்டார் வாழ்க்கைத் துணை. மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் நிறுவனரில் ஒருவரான ராஹுல் ஷர்மா அந்த புளியங்கொம்பு.

அழைப்பு

அழைப்பு

இப்போது திருமண வேலைகளில் படுபிஸியாக இருக்கிறார் அசின். தனக்கு நெருக்கமான நண்பர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் என பார்த்துப் பார்த்து திருமண அழைப்பு கொடுத்து வருகிறார்.

இந்து கிறிஸ்தவ முறைப்படி... .

இந்து கிறிஸ்தவ முறைப்படி... .

பாலிவுட்டே இந்த திருமணத்திற்கு தயாராகி வருகிறது.

ஜனவரி 19 மற்றும் 20 தேதிகளில் அசின் - ராஹுல் திருமணம் மிகவும் சிம்பிளாக மும்பையில் நடைபெற ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. இந்து மற்றும் கிறிஸ்தவ முறைகளில் நடைபெறவிருக்கும் இந்த திருமணத்தில் குடும்ப நண்பர்கள் மட்டும் கலந்துகொள்கின்றனர்.

ரிசப்ஷன்

ரிசப்ஷன்

திரையுலக நண்பர்களுக்காக 23-ஆம் தேதி ரிசப்ஷன் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. திருமணம் சிம்பிளாக இருந்தாலும், ரிசப்ஷன் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம். ஏகப்பட்ட பாலிவுட் நடிகர் நடிகைகள் வரப் போவதால், எப்படிப் பார்த்தாலும், நிகழ்ச்சி பிரமாண்டமாகத்தான் அமையப் போகிறது.

கோலிவுட்டுக்கு...

கோலிவுட்டுக்கு...

இன்னும் கோலிவுட்டில் பலருக்கும் அழைப்பு வரவில்லையாம். அழைப்பாரா அசின் என்பது குறித்தும் ஐடியா இல்லையாம். சிம்ரன் பாணியில் திருமணம் நடத்துவாரோ!

English summary
Actress Asin - Rahul Sharma marriage arrangements are going full swing, but still there is no invitation to Asin's costars in Kollywood.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil