»   »  நான் 2 புள்ளைகளுக்கு அம்மா, என்னை விட்டுடுங்க: இயக்குனரிடம் கூறிய பிரபல நடிகை

நான் 2 புள்ளைகளுக்கு அம்மா, என்னை விட்டுடுங்க: இயக்குனரிடம் கூறிய பிரபல நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகை மாதுரி தீக்சித் பற்றிய விபரங்கள் இருக்காதாம்.

பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாறை இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி படமாக்குகிறார். இந்த படத்தில் சஞ்சய் தத்தாக ரன்பிர் கபூர் நடிக்கிறார். ரன்பிர் தனது கதாபாத்திரமாக நடிப்பதை சஞ்சய் ஏற்கனவே கிண்டல் செய்துள்ளார்.

No Madhuri in Sanjay Dutt's biopic

சஞ்சய் தத் பெரிய ஸ்டார் ஆனது, போதை-மது பழக்கத்தில் சிக்கியது, பெண்கள் தொடர்பு, சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்து சிறைக்கு சென்றது ஆகிய விபரங்கள் படத்தில் இருக்குமாம்.

பிரபல பாலிவுட் நடிகை மாதுரி தீக்சித் 1990களில் சஞ்சய் தத்தை காதலித்தார். டாக்டர் ஒருவரை திருமணம் செய்து இரண்டு மகன்களுக்கு தாயான மாதுரி தன்னை பற்றிய விபரத்தை படத்தில் வைக்க வேண்டாம் என ஹிரானிக்கு கோரிக்கை விடுத்தாராம்.

No Madhuri in Sanjay Dutt's biopic

இதையடுத்து படத்தில் இருந்து மாதுரியின் விபரங்கள் மட்டும் நீக்கப்பட்டுள்ளதாம். சஞ்சய் தத் படத்தில் சோனம் கபூர் மற்றும் ராதிகா ஆப்தே ஆகியோர் நடிக்கிறார்கள். படம் கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக வெளியிடப்படுமாம்.

English summary
Director Rajkumar Hirani has reportedly removed actress Madhuri Dixit's part in his upcoming biopic on actor Sanjay Dutt.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil