»   »  திருமணம் கிடையாது.. மக்கள் பணி செய்ய காத்திருக்கிறேன் - நமீதா புது விளக்கம்

திருமணம் கிடையாது.. மக்கள் பணி செய்ய காத்திருக்கிறேன் - நமீதா புது விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருமணம் செய்து கொள்ளும் எண்ணமே எனக்கு கிடையாது. மக்கள் பணி செய்யக் காத்திருக்கிறேன், என்று நமீதா விளக்கம் அளித்துள்ளார்.

சினிமா வாய்ப்புகளே இல்லாமல் போனால் திருமணம் செய்து கொள்வேன் என நமீதா கூறியதாக செய்திகள் வெளியாகின.

அதற்கு விளக்கம் அளித்துள்ளார் நமீதா.

அதில், "நான் திருமணம் செய்து கொள்வது பற்றி யாருக்கும் பேட்டி அளிக்கவில்லை. தானாகப் பரவி வரும் செய்திகளுக்கு நான் பொறுப்பல்ல. திருமணம் என்ற பேச்சுக்கே என் மனதில் இடமில்லை.

மக்கள் பணியில் என்னை இணைத்துக் கொள்ளவே எண்ணம். அதற்கான தருணத்துக்காக காத்திருக்கிறேன்," என்று கூறியுள்ளார்.

அரசியலில் குதிக்கப் போவதாக கடந்த மக்களவைத் தேர்தலின் போதே கூறி வருகிறார் நமீதா என்பது நினைவிருக்கலாம்.

English summary
Actress Namithaa says that she hasn't any idea about marriage and wanted to enter politics.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil