»   »  "அதுக்கு" எதுக்கு திருமணம்... எடக்குமடக்கா பேசும் இளம் நடிகை

"அதுக்கு" எதுக்கு திருமணம்... எடக்குமடக்கா பேசும் இளம் நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: நான் திருமணம் செய்யாமல் லிவ் இன் முறைப்படி தான் வாழ்வேன் என நடிகை நிகிஷா பட்டேல் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு புலி படம் மூலம் நடிகையானவர் நிகிஷா பட்டேல். இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த குஜராத்தி பொண்ணு. பாலிவுட் படங்களில் நடிக்க வந்தவர் டோலிவுட்டுக்கு சென்றார்.

தற்போது அவர் ஷக்தியுடன் சேர்ந்து 7 நாட்கள் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சினிமா, திருமணம் பற்றி அவர் கூறுகையில்,

புலி

புலி

பாலிவுட்டில் நடிக்க வந்த என்னை எஸ்.ஜே. சூர்யா தெலுங்கு புலி படத்தில் கட்டாயப்படுத்தி நடிக்க வைத்தார். அந்த படம் ஓடாததால் எனக்கு புதிய பட வாய்ப்புகள் வரவில்லை. பல ஆண்டுகள் கழித்து தற்போது தான் பட வாய்ப்புகள் வருகின்றன.

திருமணம்

திருமணம்

ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ திருமணம் தேவையில்லை. எனக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை. நான் யாரையாவது விரும்பினால் அவரை திருமணம் செய்யாமலேயே வாழ்வேன்.

இந்தியா

இந்தியா

2030ம் ஆண்டில் நாட்டில் திருமண முறையே இருக்காது. மக்கள் தாலி கட்டாமல் சேர்ந்து வாழ்வார்கள். அதை நாம் பார்க்கத் தான் போகிறோம். திருமணம் செய்தவர்கள் எல்லாம் சேர்ந்தா வாழ்கிறார்கள்?

ஆண்கள்

ஆண்கள்

காதலித்து தோல்வி அடைந்துள்ளேன். முன்பு அழகான ஆண்களுக்கு முக்கியத்துவம் அளித்தேன். ஆனால் தற்போது அழகை தாண்டிய விஷயத்தை பார்க்கும் பக்குவம் வந்துவிட்டது.

English summary
Actress Nikesha Patel said that marriage system won't be in place in India in 2030.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil