»   »  (படம் போட்டு உசுப்பேத்தினாலும்) எந்த ஆணும் என் வாழ்க்கையில் இல்லை... இது எமி ஸ்டேட்மெண்ட்!

(படம் போட்டு உசுப்பேத்தினாலும்) எந்த ஆணும் என் வாழ்க்கையில் இல்லை... இது எமி ஸ்டேட்மெண்ட்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாய் ப்ரண்டுகளுடன் கவர்ச்சி போஸ் கொடுத்து அதை அடிக்கடி இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்து ரசிகர்களை உசுப்பேற்றி வருபவர் எமி ஜாக்சன். அடிக்கடி கிசுகிசுவில் சிக்கும் எமி ஜாக்சன், தன்னுடைய வாழ்க்கையில் தன் தந்தை, தான் வளர்க்கும் ஆண் தவிர எந்த ஆணுக்கும் இடமில்லை என்று கூறியுள்ளார்.

மாடலிங்கில் இருந்த எமி ஜாக்சனை, மதராச பட்டிணம் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகப் படுத்தினார் இயக்குனர் ஏ .எல்.விஜய். பிறகு அவரது தாண்டவம் படத்தில் நடித்தார். இப்போது மீண்டும் காந்தாவில் இணைந்துள்ளார்.

2012ல் ‘ஏக் தீவானா தா ‘ என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகம் ஆனார்.ஷங்கரின் ஐ படத்தில் நடித்த எமிக்கு அந்த படம் சரியாக போகாவிட்டாலும் தனுஷ் உடன் தங்கமகன், உதயநிதி உடன் கெத்து ஆகிய படங்களில் நடித்தார். தற்போது ரஜினியின் 2.0 படத்தில் நடித்து வருகிறார்.

பாலிவுட் காதல்

பாலிவுட் காதல்

பாலிவுட்டில் நடிக்கும் போது, ஏக் தீவானா தா ஹீரோ பிரதேக் பாபருடன் லவ் ஆகி, அவர் பெயரை இவர் டாட்டூ குத்த, இவர் பெயரை அவர் டாட்டூ குத்த,திருமணமே செய்து கொண்டார்கள் என்று செய்தியெல்லாம் வந்து, கடைசியில் லவ் பிரேக் ஆனதில் டாட்டூ வை ரிமூவ் செய்துவிட்டார் எமி.

பாக்ஸருடன் டேட்டிங்

பாக்ஸருடன் டேட்டிங்

2013ல் , லிவர் பூலில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பாக்ஸர் ஜோ செல்கிர்க்குடன், எமி பார்ட்டி கொண்டாடிக் கொண்டிருந்த போது , இருவருக்கும் சண்டை வந்து, எமியை பிடித்து கீழே தள்ள, எமிக்கு அடி ஏற்பட்டதாம். இதனால் காதல் பிரேக் ஆனது.

காதலருக்கு சிறை

காதலருக்கு சிறை

கேஸ் எதுவும் எமி கொடுக்கவிட்டாலும் பொது இடத்தில் ஜோ இப்படி நடந்துக் கொண்டதற்காக 300 பவுண்ட் மற்றும் 12 மாதம் கம்யூனிட்டி சர்வீஸ்ஸில் இருக்கும்படி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

கோவா பார்ட்டி

கோவா பார்ட்டி

பிரபுதேவாவின் பாலிவுட் படத்தில் நடித்தார் எமி. கோவாவில் நடந்த படப்பிடிப்பில் எமியின் பிறந்தநாளுக்கு பிரபுதேவா பார்ட்டி கொடுக்க உடனே இருவருக்கும் சம்திங் சம்திங் என்று கிசுகிசுக்கப்பட்டது.

அனிருத்துடன் நெருக்கம்

அனிருத்துடன் நெருக்கம்

நடிகர் ராயன் தாமஸ்ஸுடன் ஒன்றாக சுற்றினார். அப்புறம் எதுவும் இல்லை என்றார். தமிழில் பல நடிகர்களுடன் நடித்தாலும் அனிருத்துடன் நெருக்கமாக இருக்கும் படங்கள் வெளியானது. கெத்து படத்தில் நடித்த போது உதயநிதியுடன் கிசு கிசுக்கப்பட்டார்.

ஆண்களுக்கு இடமில்லை

கடந்த மாதம் கேன்ஸ் விழாவில் சந்தித்த பிரெஞ்சு பிசினெஸ் மேன் ஜீன் பெர்னார்ட் பெர்னாண்டஸ்ஸுடன் டின்னெர் அவருடன் எமிக்கு லவ் என்று எழுத ஆரம்பித்து விட்டார்கள். இதற்கு பதில் கூறும் விதமாக எமி, ‘ இப்போ, என் வாழ்வில்.. இருக்கிற ஆண்கள் என் அப்பாவும் என் நாய் பாப்லோ தான் என்று பதிவிட்டுள்ளார்.

English summary
no men in my life except my Dad and my doggy Pablo says Amy Jackson.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil